வடக்குக் கூட்டணி
ஆப்கானிய வடக்குக் கூட்டணி (Afghan Northern Alliance), முறையாக ஆப்கானித்தானின் மீட்புக்கான ஐக்கிய இசுலாமிய முன்னணி (United Islamic Front for the Salvation of Afghanistan), 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காபூலை ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (தாலிபான்) கைப்பற்றிய பின்னர் உருவான இராணுவக் கூட்டணி ஆகும். இந்த ஐக்கிய முன்னணியை ஆப்கானித்தானிய இசுலாமிய அரசின் முதன்மை அரசியல்தலைவர்கள், குறிப்பாக எஞ்சிய நாட்டின் அரசுத்தலைவர் புர்ஹானுத்தீன் ரப்பானி, அவரது முன்னாள் படைத்துறை அமைச்சர் அகமது ஷா மசூது உருவாக்கினர். துவக்கத்தில் இதில் பெரும்பாலும் தஜிக் மக்களே இணைந்திருந்தனர்; ஆனால் 2000ஆம் ஆண்டுவாக்கில் பிற இனக் குழுக்களும் வடக்கு கூட்டணியில் இணைந்தனர். இவர்களில் அப்துல் ரசீது தோஸ்தும், மொகமது மொகாகிக், அப்துல் காதிர், ஆசிப் மொசெனி முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
வடக்குக் கூட்டணி | |
---|---|
ஆப்கானித்தானில் போர் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவியப் போர் | |
ஐக்கிய இசுலாமிய முன்னணியின் கொடி | |
இயங்கிய காலம் | செப்டம்பர் 1996 – திசம்பர் 2001 |
தலைவர்கள் | புர்ஹானுத்தீன் ரப்பானி அகமது ஷா மசூது அப்துல் ரசீது தோஸ்தும் ஆசிப் மோசெனி மொகமது மொகாகிக் ஹாஜி அப்துல் காதிர் |
செயற்பாட்டுப் பகுதி |
ஆப்கானித்தான் |
கூட்டு | இந்தியா[1] வார்ப்புரு:நாட்டுத் தகவல் Islamic Republic of Iran வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of Turkey தஜிகிஸ்தான் உருசியா உசுபெக்கிசுத்தான் சீனா ஐக்கிய அமெரிக்கா (after செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்) துருக்மெனிஸ்தான் |
எதிராளிகள் | தாலிபான் அல் காயிதா பாக்கித்தான் |
வடக்குக் கூட்டணி தாலிபான்களுடன் தற்காப்புப் போர் நடத்தினர். இக்கூட்டணிக்கு ஈரான், உருசியா, துருக்கி, இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் பிறர் ஆதரவளித்தனர்.[2] தாலிபானுக்கு அல் காயிதா ஆதரவளித்தது. வடக்குக் கூட்டணியில் முதலில் தஜிக்கியர்களே பெரும்பான்மையினராக இருந்தனர்; பின்னர் உசுபெக்குகள், கசாராக்கள் இணைந்தனர்.[3] தாலிபான் அரசில் பஷ்தூன்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் கைப்பற்றுகையை அடுத்து 2001இல் கர்சாய் தலைமையில் அரசு அமைந்த பின்னர் வடக்குக் கூட்டணி உடைந்து பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாயின.
மேற்சான்றுகள்
தொகு- ↑ India-Pakistan Rivalry in Afghanistan - JIA SIPA
- ↑ "Afghanistan's Northern Alliance". BBC News. 19 September 2001. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1552994.stm. பார்த்த நாள்: 11 December 2012. "Until recently, the alliance's main backers were Iran, Russia and Tajikistan."
- ↑ "Who are the Northern Alliance?". BBC News. 13 November 2001. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1652187.stm. பார்த்த நாள்: 11 December 2012. "The alliance is primarily comprised of three non-Pashtun ethnic groups - Tajiks, Uzbeks and the Hazaras - and in the past relied on a core of some 15,000 troops to defend its territories against the predominantly Pashtun Taleban."