செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன.[1] நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் | |
---|---|
இடம் | நியூயார்க் நகரம், U.S. (1வது & 2வது) Arlington, U.S. (3வது) Shanksville, U.S. (4வது) |
இலக்கு(கள்) | உலக வர்த்தக மையம், பென்டகன் |
நாள் | செவ்வாய், செப்டம்பர் 11, 2001 8:46 am – 10:28 am (UTC-4) |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல், விமானக் கடத்தல் |
இறப்புகள் | 2,993 (19 பயங்கரவாதிகள் உற்பட) |
காயமடைந்தோர் | 6,291க்கு மேல் |
ஊடுருவியோர் | அல் கைடா அதன் தலைவர் ஒசாமா பின் லாடன் |
தாக்குதல்கள்
தொகு2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கைப்பற்றப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கைப்பற்றினர். மேலும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கைப்பற்றினர்.[2] பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தலுக்காக தெரிவு செய்தனர்[3].
தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு விமானங்களின் விபரம்:
- அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 11
- 11 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 76 பயணிகளுடன், அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 8:46 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தனர்.
- ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 175
- 9 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 51 பயணிகளுடன், காலை 8:14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் பாஸ்டனிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9:03 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.
- அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 77
- 6 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வொ்ஜினியாவிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9:37 மணிக்கு, பென்டகன் மீது மோத வைத்தனர்.
- ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 175
- 7 விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு கடத்தல்காரர்களைத் தவிர 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 10:03 மணிக்கு, பென்னிசிலாவனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோத வைத்தனர்.
உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலிற்கு பிறகு நடந்த தாக்குதல்களை ஊடகங்கள், தொடர்ந்து தங்களது காட்சி ஊடகத்தின் மூலம் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.[4]
விசாரணை
தொகுபு.கூ.ப. வின் விசாரணை
தொகுதாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள் சந்தேகிக்கப்படும் படியான விமானிகள் மற்றும் விமான கடத்தல்காரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது[5][6]. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமும், ஜெர்மனி உளவுத்துறையும், இத்தாக்குதலிற்கும் ஒசாமா பின் லேடனிற்கும் தொடர்பு இருக்குமென சந்தேகித்தது[7][8]. இதனிடையில், 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமானக் கடத்தல்காரர்களின் புகைப்படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது[9].
நாட்டின் பெயர் | கடத்தல்காரர்களின் எண்ணிக்கை |
---|---|
சவுதி அரேபியா | |
ஐக்கிய அரபு நாடுகள் | |
எகிப்து | |
லெபனான் |
9/11 ஆணையம்
தொகுதீவிரவாத தாக்குதலின் சூழ்நிலையை தொகுத்து அறிக்கை தயார்படுத்த 2002ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தேசிய தீவிரவாத தாக்குதல் ஆணையம் (9/11 ஆணையம்), நியு ஜெர்ஸியின் முன்னாள் ஆளுனர் தாமஸ் கேனின் தலைமையில் உருவாக்கப்பட்டது[10]. ஜூலை 22, 2004 அன்று, 9/11 ஆணையம், தாக்குதலின் நிகழ்வுகளை விரிவாக ஒரு அறிக்கையாக வெளியிட்டது. அறிக்கையின் படி, தாக்குதல்களுக்கு அல் கொய்தா உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்ட சதிகள் கண்டறியப்பட்டது. மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளை வலுப்படுத்துவதற்கான ஆய்வையும் மேற்கொண்டனர். சுயாதீன கட்சிக்குழுவால் பிரதிநிதிகள், ஆளுநர்கள் மற்றும் ஆணையர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணையத்தின் படி சிந்தனை, கொள்கை, திறன்கள், மற்றும் மேலாண்மை ஆகிய காரணிகளால்தான் தாக்குதல் நடந்தேறியுள்ளது என நம்பப்படுகிறது[11]. மேலும், எதிர்கால தாக்குதல்களை தடுக்க வழிமுறைகளும் இவ்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதன் ஒரு சில பரிந்துரைகளை, 2011ல் அரசு நிறைவேற்றியது[12].
ஆதாரங்கள்
தொகு- ↑ The September 11 attacks were described by the United Nations Security Council as "horrifying terrorist attacks". "Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States". United Nations. September 12, 2001. பார்க்கப்பட்ட நாள் 2006-09-11.
- ↑ "Chapter 1.1: 'We Have Some Planes': Inside the Four Flights". 9/11 Commission Report (PDF). National Commission on Terrorist Attacks Upon the United States. 2004.
- ↑ "The Attack Looms". 9/11 Commission Report. National Commission on Terrorist Attacks Upon the United States. 2004. பார்க்கப்பட்ட நாள் 2011-09-01.
- ↑ CNNஇல் எடுக்கப்பட்ட ஒரு செய்தித் தொகுப்பு "Breaking News Videos from CNN.com". CNN. http://www.cnn.com/video/#/video/us/2011/09/07/natpkg-911-aircheck-timeline.cnn.
- ↑ Clarke, Richard A. (2004). Against All Enemies: Inside America's War on Terrorism. New York: Simon & Schuster. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-6823-3.
- ↑ "FBI Announces List of 19 Hijackers". Federal Bureau of Investigation. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
- ↑ "Piece by piece, the jigsaw of terror revealed". The Independent. September 30, 2001 இம் மூலத்தில் இருந்து 2009-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091015065134/http://www.independent.co.uk/news/world/americas/piece-by-piece-the-jigsaw-of-terror-revealed-671334.html. பார்த்த நாள்: 2011-09-04.
- ↑ Tagliabue, John; Bonner, Raymond (September 29, 2001). "A Nation challenged: German Intelligence; German Data Led U.S. to Search For More Suicide Hijacker Teams". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A0DE5DA173DF93AA1575AC0A9679C8B63. பார்த்த நாள்: 2011-09-04.
- ↑ "2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமான கடத்தல்காரர்களின் புகைப்படங்களை, எப்.பி.ஐ. வெளியிட்டது". Federal Bureau of Investigation. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
- ↑ "National Commission on Terrorist Attacks Upon the United States". govinfo.library.unt.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
- ↑ "Foresight-and Hindsight". National Commission on Terrorist Attacks Upon the United States. National Commission on Terrorist Attacks Upon the United States. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.
- ↑ Bennett, Brian (August 30, 2011). "Post-9/11 assessment sees major security gaps". Los Angeles Times. http://articles.latimes.com/2011/aug/30/nation/la-na-911-report-card-20110831. பார்த்த நாள்: 2011-09-04.
வெளி இணைப்புகள்
தொகு- National Commission on Terrorist Attacks Upon the United States official commission website
- National September 11th Memorial and Museum – List of victims
- September 11, 2001, Documentary Project from the U.S. அமெரிக்கக் காங்கிரசு நூலகம், Memory.loc.gov
- September 11, 2001, Web Archive from the U.S. அமெரிக்கக் காங்கிரசு நூலகம், Minerva
- The September 11th Sourcebooks from The National Security Archive
- September 11 Digital Archive: Saving the Histories of September 11, 2001 from the Center for History and New Media and the American Social History Project/Center for Media and Learning
- DoD: Khalid Sheikh Mohammed Verbatim Transcript of Combatant Status Review Tribunal Hearing for ISN 10024, From WikiSource
- Multimedia
- Understanding 9/11 – A Television News Archive at இணைய ஆவணகம்
- CNN.com – Video archive, including the first and second planes
- Remembering 9/11 பரணிடப்பட்டது 2011-08-28 at the வந்தவழி இயந்திரம் – தேசிய புவியியல் கழகம்
- Time.com – 'Shattered: a remarkable collection of photographs', James Nachtwey
- September 11, 2001, Screenshot Archive பரணிடப்பட்டது 2001-09-16 at the வந்தவழி இயந்திரம் – Database of 230 screenshots from news sites around the world
- Archive of newspaper front page images for 2001-09-11 at the Newseum