அமெரிக்கக் காங்கிரசு நூலகம்

காங்கிரசு நூலகம் என்பது அமெரிக்கக் காங்கிரசின் நூலகத்தைக் குறிக்கிறது. நடைமுறையில் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகச் செயற்படும் இது, அமெரிக்கக் காங்கிரசின் ஆய்வுப் பிரிவாகவும் தொழிற்படுகிறது. வாசிங்டன் டி. சி. இல் அமைந்துள்ள இந் நூலகம் பரப்பளவிலும், நூல்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே மிகவும் பெரியது ஆகும். 2007 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நூலகத்தில் 32,332,832 நூல்களும், மொத்தமாக 138,313,427 உருப்படிகளும் உள்ளன[1]

காங்கிரசு நூலகம்
சின்னம்

முத்திரை
தொடக்கம்1800
அமைவிடம்வாசிங்டன், டி.சி.
கிளைகள்n/a
Collection
அளவு32,332,832 நூல்கள் (138,313,427 மொத்த உருப்படிகள்)[1]
Access and use
சுழற்சிlibrary does not publicly circulate
Population servedஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் 535 உறுப்பினர், அவர்களின் அலுவலர், பொதுமக்கள் ஆகியோர்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை$600,417,000[1]
இயக்குநர்ஜேம்சு எச். பில்லிங்டன் (Librarian of Congress)
பணியாளர்கள்3,691 [1]
இணையதளம்http://www.loc.gov
Map
Map

காங்கிரசு நூலகம், அமெரிக்கக் காங்கிரசினால் 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இது ஐக்கிய அமெரிக்காவின் அரசிருக்கைக் கட்டிடத்தில் (Capitol) அமைந்திருந்தது. 1812 ஆம் ஆண்டுப் போரில் இந் நூலகத்தின் தொடக்ககாலச் சேகரிப்பின் பெரும்பகுதியும் அழிந்துபோனது. 1815 ஆம் ஆண்டில், சனாதிபதி தாமசு செபர்சன் தனது சொந்தச் சேகரிப்பான 6487 நூல்களை இந் நூலகத்துக்கு விற்றார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சில ஆண்டுகள் தளர்வுற்றிருந்த இந் நூலகம், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதனால் இந் நூலகத்துக்கெனத் தனியான கட்டிடம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 2007 At A Glance