புர்கானுத்தீன் ரப்பானி

(புர்ஹானுத்தீன் ரப்பானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புர்ஹானுத்தீன் ரப்பானி (Burhanuddin Rabbani, 1940 – செப்டம்பர் 20, 2011) ஆப்கானித்தான் நாட்டின் முன்னாள் அதிபராவார். 1980களில் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஆப்கானித்தான் இருந்தபோது சக்திவாய்ந்த முஜாஹிதீன் கட்சியின் தலைவராக விளங்கியவர். சோவியத் ஒன்றியம் வெளியேறியபின் சூன் 28, 1992 முதல் செப்டம்பர் 27, 1996 வரை ஆப்கான் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பின்னர் அவரிடமிருந்து தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

புர்ஹானுத்தீன் ரப்பானி
برهان الدين رباني
ஆப்கான் அதிபர்
பதவியில்
நவம்பர் 13 2001 – திசம்பர் 22 2001
பிரதமர்ரவண் ஏ.ஜி.ஃபர்ஃகாடி
முன்னையவர்முகம்மது உமர்
பின்னவர்ஹமித் கர்சாய்
பதவியில்
சூன் 28 1992 – செப்டம்பர் 27 1996
பிரதமர்அப்துல் சபூர் ஃபாரித் கொஹிஸ்தானி
குல்புதீன் ஹெக்மாத்யர்
அர்சலா ரகுமானி (பதில்)
அகமது ஷா அகமதுசாய் (பதில்)
முன்னையவர்Sibghatullah Mojaddedi
பின்னவர்Mohammed Omar
(Head of the Supreme Council)
President of the Northern Alliance
பதவியில்
செப்டம்பர் 27 1996 – நவம்பர் 13 2001
பிரதமர்Gulbuddin Hekmatyar
Abdul Rahim Ghafoorzai
Ravan Farhâdi
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1940
படாக்ஸ்சான் ஆப்கானித்தான்
இறப்புசெப்டம்பர் 20 2011 (அகவை 70–71)
காபூல் ஆப்கானித்தான்
அரசியல் கட்சிஜமாஅத்தே இஸ்லாம்
முன்னாள் கல்லூரிகாபூல் பல்கலைக்கழகம்
அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்

தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் நவம்பர் 13 2001திசம்பர் 22 2001 காலத்தில் இவர் மீண்டும் ஆப்கான் ஜனாதிபதியாக கடமையாற்றினார். ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாயினால் அவர் உயர் சமாதானப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கான் பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதில் நாட்டம் கொண்டிருந்த ரப்பானி, தாலிபான் அங்கத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், தாலிபான் தலைவர்களுக்கு வெளிநாட்டில் தஞ்சமளித்தல் போன்ற திட்டங்களையும் முன்வைத்திருந்தார்.

செப்டம்பர் 20,2011 அன்று காபுலில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அமைதிப் பேச்சு பேச வந்தோரில் ஒருவரின் தற்கொலைத் தாக்குதலில் கொலையுண்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்கானுத்தீன்_ரப்பானி&oldid=3360552" இலிருந்து மீள்விக்கப்பட்டது