முகம்மது உமர்

தாலிபான்களின் முதல் மற்றும் முன்னாள் தலைவர்

முல்லா முகமது ஒமர் முஜாஹித் (அல்லது முகமது உமர்) (பாஷ்தூ மொழி: ملا محمد عمر مجاهد, பிறப்பு 1959[சான்று தேவை], கந்தஹார் அருகில் இறப்பு ஏப்ரல் 2013) ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர். தாலிபான்கள் இவரை நம்பிக்கைக்குரியவர்களின் தளபதி அல்லது முஸ்லிம்களின் உயர்ந்த தலைவர் என அங்கீகரித்திருந்தனர்.[1] 1996 முதல் 2001 வரை தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் 11வது தலைவராக இருந்தார். 2001இல் நடந்த அமெரிக்காவின் ஆப்கான் தாக்குதலுக்கு பிறகு இவர் தலைமறைவானார்[சான்று தேவை]. ஒசாமா பின் லாடனுக்கும் அல் காயிதாவிற்கும் உதவியதால் அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

முகமது ஒமர்
ملا محمد عمر
ஆப்கானிஸ்தான் உச்ச மன்றத் தலைவர்
பதவியில்
செப்டம்பர் 27 1996 – நவம்பர் 13 2001
பிரதமர்முகமது ரப்பானி
அப்துல் கபீர் (நடப்பின் படி)
முன்னையவர்புர்ஹானுத்தீன் ரப்பானி (ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்)
பின்னவர்புர்ஹானுத்தீன் ரப்பானி (ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1959
நொதே, ஆப்கானிஸ்தான்
அரசியல் கட்சிஆப்கானிஸ்தான் தேசிய இஸ்லாமிய புரட்சி இயக்கம்[சான்று தேவை]
தாலிபான்[சான்று தேவை]

இவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்திற்கு எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. 1980களில் சோவியத் யூனியன் மற்றும் பொதுவுடமைவாத ஆப்கானிஸ்தான் மக்கள் குடியரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் இவர் இணைந்தார்.[2] 1994ல் இவர் தாலிபானை தோற்றுவித்தார். 1995 ஆம் ஆண்டில் பெரும்பாலான தெற்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தாலிபான்கள் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றினர்.[2] இவர் ஆப்கானிஸ்தானின் அமீராக பதவி வைத்த பொழுது எப்போதாவதுதான் கந்தகார் நகரை விட்டு வெளியே செல்வார். வெளியாட்களையும் இவர் எப்போதாவதுதான் சந்தித்துள்ளார்.[3] இவர் மிகவும் சிறிய அளவே பேசக்கூடியவர். கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வாழும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.[2]

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கைதா தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் தேடப்பட்டார்.[4] இவர் அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது தப்பினார். பிறகு நேட்டோ தலைமையிலான சர்வதேச படைகள் மற்றும் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான தாலிபான் கிளர்ச்சியை இயக்கினார்.

2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபர், ஒபாமாவிற்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் கடித்தத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[5][6]

உடல்நலக்குறைவால் 2013 ஏப்ரலில் இறந்தார் என 2015ம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டது.[7]

சான்றுகள் தொகு

  1. "Index O". rulers.org.
  2. 2.0 2.1 2.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cabl என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; conflict என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Wanted Information leading to the location of Mullah Omar Up to $10 Million Reward". Rewards for Justice Program, U.S. Department of State. Archived from the original on 2006-10-05.
  5. டெலக்ராஃப்
  6. "ராய்டர்ஸ்". Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  7. டைம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_உமர்&oldid=3712689" இலிருந்து மீள்விக்கப்பட்டது