தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

தேசிய கணித தினத்திற்காக 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

தேசிய கணித தினம் இந்திய அளவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்வி நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.2017 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் நகரில் இராமானுசன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகம் திறக்கப்பட்ட்தை தொடர்ந்து தேசிய கணித தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. "PM's speech at the 125th Birth Anniversary Celebrations of ramanujan at Chennai". Prime Minister's Office, Government of India. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  2. C Jaishankar (27 December 2011). "Ramanujan's birthday will be National Mathematics Day". தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/article2750402.ece. பார்த்த நாள்: 24 April 2012. 
  3. "Math park set up government school to innovate teaching techniques" by Neel Kamal, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, October 24, 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_கணித_தினம்&oldid=3599397" இலிருந்து மீள்விக்கப்பட்டது