இலுவோயங்
|
இலுவோயங், (Luoyang, ஆங்கிலப்படுத்திய பெயர்: Loyang) சீனாவின் ஹெய்நான் மாகாணத்தின் மேற்கில் இலுவோ ஆறும் மஞ்சள் ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ள நகரமாகும். மாவட்டநிலையில் நிர்வகிக்கப்படும் இந்த நகரத்தின் கிழக்கே மாகாணத் தலைநகரான செங்சவும், தென்கிழக்கே பிங்டிங்சானும், தெற்கில் நாங்யங்கும் மேற்கில் சான்மென்சியாவும் வடக்கில் ஜியுவாங்கும் வடகிழக்கில் ஜியோசுவோவும் அமைந்துள்ளன. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலுவோயங்கின் பெருநகர் மக்கள்தொகை 6,549,941 ஆகும்; இதில் 1,857,003 மக்கள் நகரைச் சுற்றியுள்ள ஐந்து புறநகர்பகுதிகளில் வசிக்கின்றனர்.[1]
சீனாவின் மத்திய சமவெளியில் அமைந்துள்ள இலுவோயங் சீன நாகரிகத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாகும். சீன வரலாற்றின் நான்கு தொன்மையான தலைநகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் Luoyang என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- Official website பரணிடப்பட்டது 2019-07-14 at the வந்தவழி இயந்திரம் of the Luoyang Municipal Government (சீனம்)
- "Wangcheng Park in Luoyang" at China.org