திசம்பர் 5
நாள்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.
- 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
- 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
- 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.
- 1837 – இலங்கையில் முதலாவது சீனித் தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
- 1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
- 1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
- 1934 – இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.
- 1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
- 1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
- 1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1958 – பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
- 1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
- 1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- 1983 – அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
- 1995 – ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.[2]
- 2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
- 2005 – தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- 2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
- 2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.
- 2013 – யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.
பிறப்புகள்
- 1782 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862)
- 1879 – பாகாஜதீன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (இ. 1915)
- 1890 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (இ. 1976)
- 1896 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1984)
- 1901 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (இ. 1966)
- 1901 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1976)
- 1905 – சேக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி (இ. 1982)
- 1919 – மொகிதீன் பேக், இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1991)
- 1927 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2016)
- 1927 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (இ. 2016)
- 1930 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 2001)
- 1945 – ஏ. கே. கருணாகரன், இலங்கை கருநாடக இசைப் பாடகர் (இ. 2022)
- 1960 – சரிகா, இந்தியத் திரைப்பட நடிகை
- 1966 – தயாநிதி மாறன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
இறப்புகள்
- 1784 – பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)
- 1791 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)
- 1870 – அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)
- 1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, பதிப்பாளர் (பி. 1822)
- 1926 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)
- 1930 – ஆல்பிரட் பார்னார்டு பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)
- 1941 – அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)
- 1950 – அரவிந்தர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)
- 1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)
- 1963 – உசைன் சகீத் சுராவர்தி, பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)
- 1964 – வி. வீரசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1892)
- 1969 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (பி. 1885)
- 1980 – சுருளி ராஜன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1938)
- 2009 – திலகநாயகம் போல், யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்
- 2012 – ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)
- 2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
- 2016 – ஜெ. ஜெயலலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, தமிழக முதலமைச்சர் (பி. 1948)