பில்லிஸ் வீட்லி

ஃபில்லிஸ் வீட்லி (Phillis Wheatley, 1753–1784), உலகின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் கவிஞர்.[1] இவர் எழுதிய கவிதைகளில் மதம், இயற்கை, அடிமைத்தனம் ஆகியவற்றைப் பற்றியவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

பில்லிஸ் வீட்லி
பில்லிஸ் வீட்லி
பில்லிஸ் வீட்லி
பிறப்பு1753
மேற்கு ஆப்ரிக்கா
(likely செனகலின் அல்லது காம்பியா)
இறப்புபோஸ்டன், அமெரிக்கா
தொழில்கவிஞர்
மொழிஆங்கிலம்
காலம்அமெரிக்க புரட்சி
துணைவர்ஜான் பீட்டர்ஸ்
பிள்ளைகள்மூன்று

பிறப்பு

தொகு

இவர் 1753ம் ஆண்டு ஆப்ரிக்காவில் செனகலினிலோ காம்பியாவிலோ பிறந்திருப்பார் என யூகிக்கப்படுகின்றது.[2] ஏழாவது வயதில் வட அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்த ஜான், சுசன்னா வீட்லி இணையருக்கு அடிமையாக விற்கப்பட்டார். தொடக்கத்தில் வீட்டு வேலைகளைச் செய்யும் சிறுமியாக இருந்தார். பின், தங்களின் குடும்பத்தில் ஒருவராக நினைக்க தொடங்கினர். பின், வீட்லி என்ற குடும்பப் பெயரே சூட்டப்பட்டது. சுசன்னா, பில்லீசுக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தந்தார்.

கவிதைப் பயணம்

தொகு

பில்லீஸ், தனது முதல் கவிதையை 13 வயதில் எழுதினார். 1770ல் ஜார்ஜ் ஒயிட்பீல்டின் மரணத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை பாஸ்டன் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. இவர் 1773ல் எழுதிய ””Poems on Various Subjects, Religious and Moral” என்ற கவிதை நூலுக்கு இங்கிலாந்திலும், அமெரிக்கக் காலனிகளிலும் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இது மொத்தம் 39 தொகுப்புகளைக் கொண்டது.

அடிமைத்தனத்தில் இருந்து மீட்பு

தொகு

பில்லீஸ், தன் முதலாளி ஜான் வீட்லியின் மறைவுக்கு பிறகு 1778ல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜான் பீட்டர்ஸ் என்பவரை மணந்தார். வறுமையின் பிடியில் சிக்கி அவரது இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்தன. அதைத் தொடர்ந்து, கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தாலும், ஏழ்மையின் காரணமாக அவற்றை வெளியிடமுடியவில்லை. குடும்பம் வறுமையில் வாடியபோது, அவர் கணவரான ஜான் பீட்டர்ஸ், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார். பில்லீஸ் மகனை வளர்ப்பதற்காக வீட்டு வேலைக்குச் சென்றார்.

இறப்பு

தொகு

அடிமையின் கவிதைகள், முதன்முதலில் விடுதலை பெற்ற அமெரிக்க வீதிகளையும், வீடுகளையும் சென்று அடையக்காரணமாக இருந்த வீட்லி உடல் நிலை மோசமாகி 1784ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் நாள் தன் 31வது வயதில் மறைந்தார். மூன்று மணி நேரம் கழித்து அவருடைய குழந்தையும் இறந்தது.[3] அவர் இறந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அவரது கவிதைகள் செய்தித்தாளிலும், கையேடுகளாகவும் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Trials of Phillis Wheatley: America's Second Black Poet and Her Encounters with the Founding Fathers by Henry Louis Gates, Basic Civitas Books, 2010, page 5.
  2. Carretta, Vincent. Complete Writings by Phillis Wheatley, Penguin Books; New York, 2001.
  3. Encyclopedia of African American Women Writers, Volume 1. p. 611.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லிஸ்_வீட்லி&oldid=3221472" இலிருந்து மீள்விக்கப்பட்டது