கார்ல் பெர்டினான்ட் கோரி
கார்ல் பெர்டினான்டு கோரி, (Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS),[1] (திசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.[2][3] தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார்.[4][5][6][7][8] கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.[9]
கார்ல் பெர்டினான்டு கோரி | |
---|---|
கார்ல் பெர்டினான்டு கோரி | |
பிறப்பு | பிராகா | திசம்பர் 5, 1896
இறப்பு | அக்டோபர் 20, 1984 கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் | (அகவை 87)
தேசியம் | ஆத்திரிய-அங்கேரியர் |
துறை | உயிர்வேதியியலாளர் |
பணியிடங்கள் | வாசிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயி |
கல்வி கற்ற இடங்கள் | பர்சுட்டு பாகல்ட்டி ஆப் மெடிசின், சாரலசு பல்கலைக்கழகம், பிராகா |
அறியப்படுவது | கிளைக்கோசன் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947) வில்லர்டு கிப்சு விருது (1948) |
மேற்சான்றுகள்
தொகு- ↑ எஆசு:10.1098/rsbm.1986.0003
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ . பப்மெட்:11616228.
- ↑ . பப்மெட்:13315342.
- ↑ . பப்மெட்:18678102.
- ↑ . பப்மெட்:11242981.
- ↑ . பப்மெட்:11126836.
- ↑ . பப்மெட்:10199387.
- ↑ . பப்மெட்:4882480.
- ↑ "Carl and Gerti Cori and Carbohydrate Metabolism". அமெரிக்க வேதியியல் குமுகம். பார்க்கப்பட்ட நாள் June 6, 2012.