அமெரிக்க வேதியியல் குமுகம்

அமெரிக்க வேதியியல் குமுகம் (American Chemical Society) என்பது அமெரிக்க வேதியியல் அறிஞர்களின் குழுமம். இக் குமுகம் 1876ல் அமெரிக்கவில் உள்ள நியூ யார்க் பல்கலைகழகத்தில் தொடங்கபெற்றது. 2011ல் 161,000 உறுப்பினர்கள் இருந்தனர். வேதியியல், வேதிப் பொறியியல் என்பவற்றுடன் வேதியியலோடு தொடர்புடைய பிற துறைகளிலும் பல்வேறு மட்டங்களிலான பட்டங்களைப் பெற்றவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது உலகின் மிகப் பெரிய அறிவியல் சங்கமாக இருப்பதுடன், அதிகாரம் பெற்ற அறிவியல் தகவல்களுக்கான முன்னணி மூலமாகவும் இது உள்ளது. அமெரிக்க வேதியியல் குமுகம் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இவ்வமைப்பு ஆண்டுக்கு இருமுறை வேதியியல் துறை முழுவதையும் தழுவிய கூட்டங்களையும், வேதியியலின் குறிப்பிட்ட துறைகளுக்காகப் பல தனித்தனிக் ஆய்வரங்குகளையும் நடத்துகின்றது, மற்றும் 20க்கும் மேற்பட்ட பயன்மிகு முதல்தரமான ஆய்விதழ்களை வெளியிடுகின்றது. இதனால் வெளியிடப்பட்ட முதல் ஆய்விதழின் தொடக்கம் 1879.

அமெரிக்க வேதியியல் குமுகம்
உருவாக்கம்1876
தலைமையகம்வாசிங்டன், டி.சி.
தலைமையகம்
  • ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்
161,000
ஆட்சி மொழி
ஆங்கிலம்
வலைத்தளம்http://www.acs.org/

இக் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தனியொரு அடையாள எண் தருகின்றது. இதற்கு CAS எண் என்று பெயர். இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

ஒரு வேதியியல் பொருளின் CAS எண் என்ன என்று கண்டுபிடிக்க கீழ்க் காணும் இலவச இணைப்புகளை பயன் படுத்தலாம்.