பன்னாட்டு ஒலிம்பிக் குழு

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (பிரெஞ்சு மொழி: Comité international olympique, CIO, ஆங்கில மொழி: International Olympic Committee, IOC) (சுருக்கமாக ப.ஒ.கு) சூன் 23, 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பியர் டி குபேர்டன் துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

பன்னாட்டு ஒலிம்பிக் குழு
Comité International Olympique
International Olympic Committee
உருவாக்கம்சூன் 23 1894
வகைவிளையாட்டுக்கள் கூட்டமைப்பு
தலைமையகம்லோசான், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
ஆட்சி மொழி
பிரெஞ்சு, ஆங்கிலம், மற்றும் விளையாட்டுக்கள் நடத்தும் நாட்டின் அலுவல்முறை மொழி, தேவைப்பட்டால்
தலைவர்
ஜாக் ரோஜ்
வலைத்தளம்www.Olympic.org
லோசானில் அமைந்துள்ள அலுவலகம்

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.

வெளியிணைப்புகள் தொகு