லோசான் (Lausanne, loˈzan) சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பேசும் பகுதியில் உள்ள ரோமண்டியில் உள்ள ஓர் நகரமாகும். வாட் கன்டனின் தலைநகரமும் ஆகும். லோசான் மாவட்டத் தலைநகரும் இதுவே. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்துள்ளது.[3] லோசன் வடமேற்கில் ஜூரா மலைகளைக் கொண்டு பிரான்சின் எல்லை நகரான எவியன் லெ பெய்ன்சை எதிர் நோக்கி அமைந்துள்ளது. லோசான் ஜெனிவாவிலிருந்து வடகிழக்கில் 62 km (39 mi) உள்ளது.

லோசான்
லோசானின் வான்வழி காட்சி
லோசானின் வான்வழி காட்சி
லோசான்-இன் சின்னம்
சின்னம்
லோசான்-இன் அமைவிடம்
Map
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்வாட்
மாவட்டம்லோசான் மாவட்டம்
அரசு
 • நகரத்தந்தைசிண்டிகேட்
தானியல் பிரெலாசு சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி
(as of 2008)
பரப்பளவு
 • மொத்தம்41.37 km2 (15.97 sq mi)
ஏற்றம்
495 m (1,624 ft)
உயர் புள்ளி
(ஜோரட்)
929.4 m (3,049.2 ft)
தாழ் புள்ளி
(ஜெனிவா ஏரி)
372 m (1,220 ft)
மக்கள்தொகை
 (2018-12-31)[2]
 • மொத்தம்1,39,111
 • அடர்த்தி3,400/km2 (8,700/sq mi)
இனம்லெ லோசானுவா (Les Lausannois)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
1000-1018
SFOS இல.5586
இணையதளம்www.lausanne.ch
Profile (in French), SFSO statistics

2009 இறுதியில் மக்கள்தொகை 125,885ஆக இருந்தது. நாட்டின் நான்காவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது'[4]. விளையாட்டு பிணக்குத் தீர்வாணையத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளது. இந்நகரைச் சுற்றிலும் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. லோசான் நகரத் தொடர்வண்டி அமைப்பில் 28 நிலையங்கள் உள்ளன. உலகில் விரைவுப் போக்குவரத்து நகர்த் தொடர்வண்டி அமைந்துள்ள மிகச்சிறிய நகராக விளங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Arealstatistik Standard - Gemeinden nach 4 Hauptbereichen". Retrieved 13 சனவரி 2019.
  2. Error: Unable to display the reference properly. See the documentation for details.
  3. Clarey, Christopher. "Introduction to Lausanne". த நியூயார்க் டைம்ஸ். http://travel.nytimes.com/travel/guides/europe/switzerland/lausanne/overview.html?st=cse&sq=Lausanne&scp=3. பார்த்த நாள்: 2008-04-20. 
  4. "Welcome to International Sports Federations". International Sports Federations. Archived from the original on 2014-11-04. Retrieved 2009-09-27.

வெளி யிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லோசான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோசான்&oldid=3702658" இலிருந்து மீள்விக்கப்பட்டது