சேக் அப்துல்லா
சேக் முஹம்மது அப்துல்லா (Sheikh Mohammed Abdullah, 5 திசம்பர் 1905 – 8 செப்டம்பர் 1982) இந்தியாவின் வடகோடி மாநிலமான சம்மு காசுமீர் அரசியலில் முதன்மை பங்களித்த இந்திய அரசியல்வாதி ஆவார். "சேர்-இ-காசுமீர்" (காசுமீரின் சிங்கம்) என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்ட அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சி நிறுவிய தலைவரும் மூன்று முறை சம்மு காசுமீர் முதல்வராக பணியாற்றியவருமாவார். மகாராசா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக குரலெழுப்பி காசுமீரில் தன்னாட்சி ஏற்பட போராடினார்.
சேக் அப்துல்லா | |
---|---|
3வது சம்மு காசுமீர் முதல்வர் | |
பதவியில் 25 பெப்ரவரி 1975 – 26 மார்ச் and 1977 | |
முன்னையவர் | சையத் மீர் காசிம் |
பின்னவர் | ஆளுநரின் ஆட்சி |
பதவியில் 9 சூலை 1977 – 8 செப்டம்பர் 1982 | |
முன்னையவர் | ஆளுநரின் ஆட்சி |
பின்னவர் | பாரூக் அப்துல்லா |
2வது சம்மு காசுமீர் பிரதமர் | |
பதவியில் 5 மார்ச் 1948 – 9 ஆகத்து 1953 | |
முன்னையவர் | மெகர் சந்த் மகசன் |
பின்னவர் | பக்சி குலாம் மொகமது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 திசம்பர் 1905[1] சௌரா, காஷ்மீர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 8 செப்டம்பர் 1982 (அகவை 76)[1] சிறிநகர், காசுமீர் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
துணைவர் | பேகம் அக்பர் ஜகான் அப்துல்லா |
பிள்ளைகள் | பாரூக் அப்துல்லா |
முன்னாள் கல்லூரி | இசுலாமியாக் கல்லூரி, இலாகூர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்[2] |
1947ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது இம்மாநில பிரதமராக பொறுப்பில் இருந்தார்.[3] ஆகத்து 8, 1953இல் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு பக்சி குலாம் மொகமது புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்துல்லா சிறை செய்யப்பட்டு மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். தமிழகத்தின் கொடைக்கானல் மலைத்தலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1965இல் ‘சதர்-ஏ-ரியாசத்’திற்கு மாற்றாக ஆளுநரையும் ‘பிரதமருக்கு’ மாற்றாக முதல்வரையும் பயன்படுத்த அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.[4] 1974ஆம் ஆண்டில் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி மீண்டும் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். செப்டம்பர் 8, 1982இல் தமது மரணம் வரை தொடர்ந்து முதல்வராக நீடித்தார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Hoiberg, Dale H. (2010) p 22-23
- ↑ Tej K. Tikoo (19 சூலை 2012). Kashmir: Its Aborigines and Their Exodus. Lancer Publishers. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-935501-34-3. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2013.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Lamb, Alastair. The Myth of Indian Claim to Jammu and Kashmir: A Reappraisal. World Kashmir Freedom Movement.
- ↑ Noorani, A.G. (2011). Article 370 : a constitutional history of Jammu and Kashmir (1. publ. ed.). New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198074083.