சம்மு காசுமீர் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சம்மு காசுமீர் முதலமைச்சர் (Chief Minister of Jammu and Kashmir) வட இந்திய யூனியன் பிரதேசமான சம்மு காசுமீரின் முதன்மை செயலதிகாரி ஆவார். மார்ச்சு 30, 1965க்கு முன்பாக இப்பதவி சம்மு காசுமீரின் பிரதமர் என்றறியப்பட்டது. சம்மு காசுமீர் மாநிலம் தனது வசீர்-ஏ-ஆசம் (பிரதமர்) மற்றும் சதர்-ஏ-ரியாசத்தை (அரசுத்தலைவர்) தேர்ந்தெடுத்துக் கொண்டது. சம்மு காசுமீர் அரசியலமைப்பில் 1965இல் மேற்கொண்ட திருத்தத்தின்படி தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே முறையே முதலமைச்சர் மற்றும் ஆளுநர் எனப்படுகின்றனர். [1] மார்ச்சு 30, 1965 அன்று செயற்பாட்டிற்கு வந்த இந்த மாற்றத்தின்போது பிரதமராக செயல்புரிந்த குலாம் முகமது சாதிக் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சம்மு காசுமீர் முதலமைச்சர்களின் பட்டியல்
தற்போது
குடியரசுத் தலைவர் ஆட்சி

31 அக்டோபர் 2019 முதல்
நியமிப்பவர்சம்மு காசுமீர் துணைநிலை ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்மெகர் சந்த் மகசன் (பிரதமராக)
குலாம் முகமது சாதிக் (முதல்வராக)
உருவாக்கம்15 அக்டோபர் 1947
இந்திய வரைபடத்தில் உள்ள சம்மு காசுமீர்

ஜூன் 2018 முதல் சம்மு காசுமீர் முதலமைச்சர் பதவி வெறுமையாக உள்ளது; மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி செயற்பாட்டில் உள்ளது.[2]

சம்மு காசுமீர் பிரதமர்கள்

தொகு

கட்சிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள்

தொகு
  பொருத்தமற்றது (ஆளுநரின் ஆட்சி)
எண் பெயர் பதவிக்காலம்[3]
(பதவிக்கால நீளம்)
கட்சி[a]
1 மெகர் சந்த் மகசன் 15 அக்டோபர் 1947 – 5 மார்ச் 1948
(0 ஆண்டுகள், 142 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு
2 சேக் அப்துல்லா 5 மார்ச் 1948 – 9 ஆகத்து 1953
(5 ஆண்டுகள், 157 நாட்கள்)
தேசிய மாநாடு
3 பக்சி குலாம் மொகமது 9 ஆகத்து 1953 – 12 அக்டோபர் 1963
(10 ஆண்டுகள், 64 நாட்கள்)
4 குவாஜா சம்சுத்தீன் 12 அக்டோபர் 1963 – 29 பெப்ரவரி 1964
(0 ஆண்டுகள், 140 நாட்கள்
5 குலாம் முகமது சாதிக் 29 பெப்ரவரி 1964 – 30 மார்ச் 1965
(1 ஆண்டு, 29 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு

சம்மு காசுமீர் முதலமைச்சர்கள்

தொகு
 
சேக் அப்துல்லா
 
முதலமைச்சராகப் பணியாற்றிய குலாம் நபி ஆசாத் தொடர்ந்து நடுவண் அரசில் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 
பரூக்கின் மைந்தர் உமர் அப்துல்லா, அப்துல்லாக் குடும்பத்திலிருந்து முதல்வரான மூன்றாம் தலைமுறையினராவார்.

.

எண்[b] பெயர் பதவிக்காலம்[3]
(பதவிக்கால நீளம்)
கட்சி[a]
1 குலாம் முகமது சாதிக் 30 மார்ச் 1965 – 12 திசம்பர் 1971
(6 ஆண்டுகள், 257 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு
2 சையத் மீர் காசிம் 12 திசம்பர் 1971 – 25 பெப்ரவரி 1975
(3 ஆண்டுகள், 75 நாட்கள்
3 சேக் அப்துல்லா 25 பெப்ரவரி 1975 – 26 மார்ச் 1977
(2 ஆண்டுகள், 29 நாட்கள்)
தேசிய மாநாடு
வெறுமை
(ஆளுநரின் ஆட்சி)
26 மார்ச் – 9 சூலை 1977
(0 ஆண்டுகள், 105 நாட்கள்)
பொருத்தமற்றது
(3) சேக் அப்துல்லா [2] 9 சூலை 1977 – 8 செப்டம்பர் 1982
(5 ஆண்டுகள், 61 நாட்கள்)
தேசிய மாநாடு
4 பாரூக் அப்துல்லா 8 செப்டம்பர் 1982 – 2 சூலை 1984
(1 ஆண்டு, 298 நாட்கள்
5 குலாம் முஹம்மது ஷா 2 சூலை 1984 – 6 மார்ச் 1986
(1 ஆண்டு, 247 நாட்கள்)
அவாமி தேசிய மாநாடு
வெறுமை
(ஆளுநரின் ஆட்சி)
6 மார்ச் – 7 நவம்பர் 1986
(0 ஆண்டுகள், 246 நாட்கள்)
பொருத்தமற்றது
(4) பாரூக் அப்துல்லா [2] 7 நவம்பர் 1986 – 19 சனவரி 1990
(3 ஆண்டுகள், 73 நாட்கள்)
தேசிய மாநாடு
வெறுமை
(ஆளுநரின் ஆட்சி)
19 சனவரி 1990 – 9 அக்டோபர் 1996
(6 ஆண்டுகள், 264 நாட்கள்)
பொருத்தமற்றது
(4) பாரூக் அப்துல்லா [3] 9 அக்டோபர் 1996 – 18 அக்டோபர் 2002
(6 ஆண்டுகள், 9 நாட்கள்)
தேசிய மாநாடு
வெறுமை
(ஆளுநரின் ஆட்சி)
18 அக்டோபர் – 2 நவம்பர் 2002
(0 ஆண்டுகள், 15 நாட்கள்)
பொருத்தமற்றது
6 முப்தி முகமது சயீத் 2 நவம்பர் 2002 – 2 நவம்பர் 2005
(3 ஆண்டுகள், 0 நாட்கள்)
மக்களின் சனநாயக கட்சி
7 குலாம் நபி ஆசாத் 2 நவம்பர் 2005 – 11 சூலை 2008
(2 ஆண்டுகள், 252 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு
வெறுமை
(ஆளுநரின் ஆட்சி)
11 சூலை 2008 – 5 சனவரி 2009
(0 ஆண்டுகள், 178 நாட்கள்)
பொருத்தமற்றது
8 உமர் அப்துல்லா 5 சனவரி 2009 – 8 சனவரி 2015
(6 ஆண்டுகள், 3 நாட்கள்)
தேசிய மாநாடு
வெறுமை[2]
(ஆளுநரின் ஆட்சி)
8 சனவரி 2015 – நடப்பில்
(9 ஆண்டுகள், 349 நாட்கள்)
பொருத்தமற்றது
9 முப்தி முகமது சயீத் 28 பிப்ரவரி 2015 – சனவரி 7, 2016 மக்களின் சனநாயக கட்சி
யாருமில்லை
(ஆளுநரின் ஆட்சி)
8 ஜனவரி 2016 - ஏப்ரல் 3, 2016
10 மெகபூபா முப்தி 4 ஏப்ரல் 2016 - 20 சூன் 2018
(2 ஆண்டுகள், 77 நாட்கள்)
மக்களின் சனநாயக கட்சி
யாருமில்லை[4]
(ஆளுநரின் ஆட்சி)
20 சூன் 2018 – 19 திசம்பர் 2018
(0 ஆண்டுகள், 182 நாட்கள்)
பொருத்தமற்றது
யாருமில்லை[5]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
20 திசம்பர் 2018 –
(6 ஆண்டுகள், 2 நாட்கள்)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 இங்கு முதல்வரின் கட்சி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தலைமையேற்கும் மாநில அரசு, பல கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் சிக்கலான கூட்டணியால் உருவாகியிருக்கலாம்; அவை இங்கு பட்டியலிடப்படவில்லை.
  2. அடைப்புக்குறியில் தரப்பட்டுள்ள எண் அவர் எத்தனையாவது முறையாக பதவியேற்றுள்ளார் என்பதைக் குறிக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு