ஜம்மு காஷ்மீர் அரசு
ஜம்மு காஷ்மீர் அரசு என்பது சம்மு காசுமீர் யூனியன் பிரதேசத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் பிரிவு, நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மாநிலம் இரு தலைநகரங்களைக் கொண்டது. கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், மழைக்காலத்தில் ஜம்முவிலும் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடத்தப்படும்.
தலைமையிடம் | ஜம்மு (மழைக்காலம்) சிறிநகர் (கோடைகாலம்) |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | மனோஜ் சின்ஹா (7 ஆகஸ்ட் 2020 முதல்) |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை |
|
உறுப்பினர்கள் | 89 |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் |
2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று கிரீஷ் சந்திர முர்மு ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி முறைப்படி செயல்படத்துவங்கியது.
சட்டம் இயற்றும் பிரிவு
தொகுசட்டமன்றத்தில் 89 உறுப்பினர்கள் உள்ளனர்.
நீதித் துறை
தொகுஇந்த மாநிலத்தில் நீதித் துறையின் உயர் அமைப்பாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் திகழ்கிறது. இது ஸ்ரீநகரிலும் ஜம்முவிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.[1]
செயலாக்கம்
தொகுமத்திய அரசின் அறிவுரையின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிப்பார். மாநில அரசின் தலைவராக துணைநிலை ஆளுநர் கருதப்பட்டாலும், இந்த பதவிக்கு அதிக அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பர். இவருக்கு மாநில அரசில் அதிக அதிகாரம் இருக்கும்.
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- ஜம்மு காஷ்மீர் அரசின் தளம் பரணிடப்பட்டது 2017-09-15 at the வந்தவழி இயந்திரம்