குலாம் நபி ஆசாத்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

குலாம் நபி ஆசாத் (பிறப்பு: மார்ச் 7, 1949, சம்மு காசுமீர், இந்தியா) இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியும் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் ஆவார்.[1] தற்போது இந்திய மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ளார்.[2]

குலாம் நபி ஆசாத்
Ghulam Nabi Azad.jpg
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 சூன் 2014
முன்னவர் அருண் ஜெட்லி
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 26 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் அன்புமணி ராமதாஸ்
பின்வந்தவர் ஹர்ஷ் வர்தன்
சம்மு காசுமீர் முதலமைச்சர்
பதவியில்
2 நவம்பர் 2005 – 11 சூலை 2008
ஆளுநர் ஸ்ரீநிவாஸ் குமார் சின்கா
நரீந்தர் நாத் வோரா
முன்னவர் முஃப்தி மொகமது சயீது
பின்வந்தவர் உமர் அப்துல்லா
தனிநபர் தகவல்
பிறப்பு 7 மார்ச்சு 1949 (1949-03-07) (அகவை 72)
தோடா மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (2004–இன்றுவரை)
வாழ்க்கை துணைவர்(கள்) ஷமீம் தேவ் ஆசாத் (1980–இன்றுவரை)
பிள்ளைகள் சதாம்
சோஃபியா
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு பட்டப்படிப்புக் கல்லூரிகள், பதர்வா
சம்மு பல்கலைக்கழகம்
காசுமீர் பல்கலைக்கழகம்

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அக்டோபர் 27, 2005 வரை பணியாற்றியுள்ளார். பின்னர் சம்மு காசுமீர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக ஒன்பது முறையும் காங்கிரசு செயற்குழு உறுப்பினராக 18 ஆண்டுகளும் இருந்துள்ளார்.

மேற்சான்றுகள்தொகு

  1. "Council of Ministers - Who's Who - Government: National Portal of India". http://india.gov.in. இந்திய அரசு. பார்த்த நாள் 11 ஆகத்து 2010.
  2. "Ghulam Nabi Azad named Leader of Congress in Rajya Sabha". IANS. news.biharprabha.com. பார்த்த நாள் 9 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_நபி_ஆசாத்&oldid=2230274" இருந்து மீள்விக்கப்பட்டது