சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) என்பது இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களும், குடும்பநலத் திட்டங்களும் இவ்வமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இவ்வமைச்சகத்தில் நான்கு துறைகள் உள்ளன. அவை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆயுஷ் துறை, சுகாதார ஆய்வுத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை ஆகும். இதன் மூத்த அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் இணை அமைச்சர் சத்திய பால் சிங் பாகேல் ஆவார்.
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி |
வலைத்தளம் | www.mohfw.gov.in |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
தொகுமருத்துவம் மற்றும் சுகாதார விசயங்களில் ஆலோசனையும், சுகாதாரப் பணி செயல்பாடுகளும் புரியும் சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம்(Dte.GHS) இத்துறையில் இயங்குகிறது. இந்திய மருந்தாய்வுக் குழுவின் மூலம் இந்திய மருந்துகளின் தரத்தை நிர்ணயம் செய்து சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது.[1]
சுகாதாரம்
தொகுநலம் பேணல் விழிப்புணர்வுப் பிரச்சாரம், எதிர்ப்புசக்தி விழிப்புணர்வுப் பிரச்சாரம், தடுப்பு மருந்து மற்றும் பொதுநலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆகிவற்றில் கவனம் செலுத்துகிறது. எய்ட்சு, புற்றுநோய், யானைக்கால் நோய், ஐயோடின் குறைபாடு, தொழு நோய், மனநலம், குருட்டுத் தன்மை, கேள்விக் குறைபாடு, நீரிழிவு நோய், இதயக் குழலிய நோய் மற்றும் காச நோய் போன்றவைகளுக்கு 13 தேசிய சுகாதாரத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
- தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (Naco) (மேலும் பார்க்க HIV/AIDS in India)
- 13 தேசிய சுகாதார திட்டங்கள்
- தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் (எய்ட்ஸ்) எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை (தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு), (எய்ட்ஸ் பற்றிய விபரங்கள்)
- தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் (புற்றுநோய்)
- தேசிய யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு திட்டம் (யானைக்கால் நோய்)
- தேசிய அயோடின் குறைபாடு கட்டுப்பாட்டு திட்டம் (அயோடின் குறைபாடு)
- தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் (தொழுநோய்)
- தேசிய மன நலத் திட்டம் (மன ஆரோக்கியம்)
- தேசிய பார்வைக்குறைப்பாடு கட்டுப்பாடு திட்டம் (பார்வைக்குறைப்பாடு)
- தேசிய செவிட்டுத்தன்மை தடுப்பு மற்றும் குறைபாடு கட்டுப்பாட்டுத் திட்டம் (செவிட்டுத்தன்மை)
- தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் ( புகையிலை கட்டுப்பாடு)
- தேசிய இரத்த மூலம் பரவும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NVBDCP) ( பரவும் நோய்)
- முதன்மை நீரிழிவு நோய், சிவிடி மற்றும் பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்த் திட்டம் (நீரிழிவு, இதயக் குழலிய நோய், பக்கவாதம்)
- திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (காசநோய்)
- யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டம்
- இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India)
- இந்திய பல் மருத்துவ கவுன்சில் (Dental Council of India)
- இந்தியா பார்மசி கவுன்சில் (Pharmacy Council of India)
- இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council)
- அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனம் (AIISH), மைசூர்
- அகில இந்திய உடல் மருத்துவ மற்றும் மறுசீரமைப்பு நிறுவனம் (AIIPMR), மும்பை
- மருத்துவமனையில் சேவைகள் ஆலோசனை கார்ப்பரேஷன் லிமிடெட் (HSCC)
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா
- மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு
குடும்ப நலம்
தொகுகுடும்பம் வாழ்க்கைத் தரம், மகப்பேறு மருத்துவம், கர்ப்பிணிகள் ஆரோக்கியம், குழந்தை மருத்துவம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. அரச சார்பற்ற அமைப்புகள், சர்வதேச உதவிக்குழுக்கள், கிராம சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுடன் இணைந்து தகவல்களைப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தி பணியாற்றுகிறது.
- இந்தியாவின் 17 மாநிலங்கள் முழுவதும் 18 மக்கள்தொகை ஆராய்ச்சி மையங்கள் (PRCs) ஆறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆறு மற்ற நிறுவனங்களில் உள்ளன.
- தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் நிறுவனம்,(NIHFW) தென் தில்லி
- சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS), மும்பை
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI), லக்னோ
- மருத்துவ ஆராய்ச்சி இந்தியக் கவுன்சில், புது தில்லி: 1911 ல் நிறுவப்பட்ட இது உலகின் பழமையான மருத்துவ உடல்கள் ஆராய்ச்சிமையமாகும்.
ஆயுஷ் துறை (AYUSH)
தொகு1995ல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை தொடங்கப்பட்டது. பின்னர் 2003 நவம்பரில் ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை (சுருக்கமாக ஆயுஷ் துறை) என்று பெயர்மாற்றப்பட்டது. இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் கல்வி, தரநிர்ணயம், கட்டுப்பாடுகள், மருத்துவப் பொருள் மேம்பாடு, ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை இத்துறை கையாளுகிறது.[2]
ஆயுஷ் துறை கட்டுப்பாட்டின் கீழ் பின்வரும் துறைகள் உள்ளன:
ஆய்வு குழுக்கள்:[3]
- ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRAS)
- சித்த ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRS)
- யுனானி மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRUM)
- ஓமியோபதி ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRH)
- யோகா மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRYN)
- இந்திய மருத்துவம் Pharmacopoeia ஆய்வகம் (PLIM)
- ஹோமியோபதி மருந்தியல் ஆய்வகம் (HPL)
தேசிய நிறுவனங்கள் (இந்திய மருத்துவத்தில் கல்வி):[4]
- தேசிய ஆயுர்வேத கல்வி நிறுவனம், ஜெய்ப்பூர் (NIA)
- தேசிய சித்தா கல்வி நிறுவனம், சென்னை (NIS)
- தேசிய ஓமியோபதி கல்வி நிறுவனம், கொல்கத்தா (NIH)
- தேசிய நேச்சுரோபதி கல்வி நிறுவனம், புனே (NIN)
- தேசிய யுனானி மருத்துவ கல்வி நிறுவனம் , பெங்களூர் (NIUM)
- போஸ்ட் கிராஜுவேட் ஆயுர்வேத போதனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜாம்நகர், குஜராத் (IPGTR)
- ராஷ்டிரிய ஆயுர்வேத வித்யாபீடம், புது தில்லி (RAV)
- மொரார்ஜி தேசாய் யோகா தேசிய நிறுவனம், புது தில்லி (MDNIY)
வல்லுநர் குழுக்கள்
- ஓமியோபதி மத்திய கவுன்சில் (CCH)
- இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (CCIM)
- இந்திய மருந்தியல் ஆணையம்
சுகாதார ஆய்வுத்துறை
தொகுஇந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி 1961ன் படி 2007 செப்டம்பரில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணையுடன் இத்துறை தொடங்கப்பட்டது. நவீன மருத்துவத் தொழில் நுட்பத்தை மக்களுக்கு அளிக்கும் விதத்தில் நோய்நாடல், சிகிச்சைமுறை, நோய் தடுப்புமுறை, கருவிகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றில் புதுமையை ஊக்குவிக்கிறது. இதர அறிவியல் துறையுடன் இணைந்து பொது சுகாதாரப் பணிகளில் ஆய்வும் அணுகுமுறையும் வழங்குகிறது.[5]
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை
தொகுதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு(NACO) இத்துறையின் கீழ் செயல்படுகிறது. இவ்வமைப்பின் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உரியமுறையில் தரமான சிகிச்சை அளைக்கிறது. மேலும் ஹெச்.ஐ.வி. இல்லா சூழலை உருவாக்க ஆதரவும் முனைப்பும் தந்து எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது.[6]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Pharmacopoeia Commission". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
- ↑ ஆயுஷ் இணையதளம்
- ↑ "Research councils". AYUSH website.
- ↑ "National Institutes". AYUSH website.
- ↑ சுகாதார ஆய்வுத்துறை இணையதளம்
- ↑ தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இணையதளம்