இந்திய மருத்துவக் கழகம்

இந்திய மருத்துவக் கழகம் என்பது இந்தியாவில் சீரான தரமிக்க மருத்துவக்கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பு இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்துதல்,மருத்துவப்பல்கலைகழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பட்டம் வழங்குதல்,மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பணிகளை ஒழுங்கு படுத்துதல் முதலிய பணிகளை செய்து வருகிறது.

இந்திய மருத்துவக் கழக சின்னம்
படிமம்:MCIindia.jpg
இந்திய மருத்துவக் கழகம்

வளர்ச்சிதொகு

இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1933ன் படி, 1934ல் நிறுவப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1956ன் படி, மறுவரையரை செய்யப்பட்டது.

முக்கியப்பணிகள்தொகு

  • தரமிக்க மருத்துவ இளநிலை படிப்புகளை வழங்குதல்
  • தரமிக்க மருத்துவ முதுநிலை படிப்புகளை வழங்குதல்
  • இந்தியாவிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்
  • அயல்நாட்டிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்
  • மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்
  • மருத்துவ சேவையில் ஈடுபட அனுமதி அளித்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பட்டியலை நிர்வகித்தல்

வெளி இணைப்புகள்தொகு