ஆயுஷ் அமைச்சகம்

ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய அமைச்சராக சர்பானந்த சோனாவால் மற்றும் இராஜாங்க அமைச்சராக மகேந்திரா முஞ்ச்பரா உள்ளனர்.[1] இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி, சோவா-ரிக்பா மற்றும் யோகாசனம் ஆகிய கல்விகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் விளம்பரப்படுத்த இந்த அமைச்சகம் செயல்படுகிறது.

ஆயூஷ் அமைச்சகம்
அமைச்சகம் மேலோட்டம்
அமைப்பு9 நவம்பர் 2014
(10 ஆண்டுகள் முன்னர்)
 (2014-11-09)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
பொறுப்பான அமைச்சர்கள்
அமைச்சகம் தலைமை
  • இராஜேஷ் கோடேச்சா, செயலாளர்
மூல அமைச்சகம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வலைத்தளம்ayush.gov.in

வரலாறு

தொகு

1995ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகளுக்கான துறை நிறுவப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று இந்திய மருத்துமுறைகளுக்கான துறை ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]

நிறுவனங்கள்

தொகு

இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[3]

  • தேசிய ஓமியோபதி நிறுவனம்[4]
  • தேசிய சித்தா நிறுவனம் [5]
  • தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் [6]
  • தேசிய ஆயுர்வேத நிறுவனம்
  • தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம்
  • மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
  • வடகிழக்கு தேசிய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனம்
  • வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவம்

ஒழுங்குமுறை அமைப்புகள்

தொகு

இந்த அமைச்சகம் கீழ் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகள் கொண்டுள்ளது.

  • இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய ஆணையம்.[7]
  • மத்திய ஓமியாபதி மன்றம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ministers and their Ministries of India
  2. Bhatia, Rahul; Lasseter, Tom (May 23, 2017). "Modi's Yogi" (in en). Reuters. http://www.reuters.com/investigates/special-report/india-modi-ramdev/. 
  3. "Institutes under AYUSH" (PDF). Archived from the original (PDF) on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
  4. "About Us". NATIONAL INSTITUTE OF HOMOEOPATHY.
  5. Manikandan, K. (1 September 2005). "National Institute of Siddha a milestone in health care". தி இந்து (Chennai) இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071107022440/http://www.hindu.com/2005/09/01/stories/2005090114280700.htm. 
  6. "National Institute of Unani Medicine, Bangalore". AYUSH. Archived from the original on 2013-12-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.
  7. "National Commission for Indian System of Medicine". 11 August 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுஷ்_அமைச்சகம்&oldid=3741929" இலிருந்து மீள்விக்கப்பட்டது