யோகாசனம்

யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்

5000 ஆண்டுகளுக்கு முன்[சான்று தேவை] இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

உடலுக்குள் இயங்கும் 7 ஆதாரங்கள் - [1] மூலாதாரம், [2] சிவாதிட்டானம், [3] மணிப்பூரகம், [4] அனாகதம், [5] விசுக்தி, (6] ஆக்கினை, [7] துரியம் எனும் சகஸ்ராதாரம்
இடகலை, பிங்கலை நாடிசுத்தி
சர்வாங்காசனம்
சிரசானம்
பத்ராசனம்
பத்மாசனம்

யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்."[1]

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.

ஆசனப் பயிற்சியின் வகைகள். தொகு

  • பத்மாசனம்
  • வீராசனம்
  • யோகமுத்ரா
  • உத்தீதபத்மாசனம்
  • சானுசீரானம்
  • பஸ்திமோத்தாசனம்
  • உத்தானபாத ஆசனம்
  • நவாசனம்
  • விபரீதகரணி
  • சர்வாங்காசனம்
  • ஹலாசனம்
  • மச்சாசனம்
  • சப்தவசீராசனம்
  • புசங்காசனம்
  • சலபாசனம்
  • தனுராசனம்
  • வச்சிராசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • மகாமுத்ரா
  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  • சிரசாசனம்
  • சவாசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • அர்த்த மத்ச்யோந்திராசனம்
  • அர்த்த சிரசானம்
  • சிரசாசனம்
  • நின்ற பாத ஆசனம்
  • பிறையாசனம்
  • பாதாசுத்தானம்
  • திருகோணசனம்
  • கோணாசனம்
  • உட்டியானா
  • நெளலி
  • சக்கராசனம்
  • சவாசனம்/சாந்தியாசனம்
  • பவனமுத்தாசனம்
  • கந்தபீடாசனம்
  • கோரசா ஆசனம்
  • மிருகாசனம்
  • சர்வாங்காசனம்
  • நடராசா ஆசனம்
  • ஊர்த்துவ பதமாசனம்
  • பிரானாசனம்
  • சம்பூரண சபீடாசனம்
  • சதுரகோனோசனம்
  • ஆகர்சன தனூராசனம்
  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  • உருக்காசனம்
  • ஏக அத்த புசங்காசனம்
  • யோகா நித்திரை
  • சாக்கோராசனம்
  • கலா பைரப ஆசனம்
  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  • கவையாசனம்
  • பூர்ண நவாசனம்
  • முக்த அகத்த சிரசாசனம்
  • ஏகபாத சிரசாசனம்
  • துரோணாசனம்

மேற்கோள்கள் தொகு

  1. இரா. ஆண்டியப்பன். (2003). அரோக்கிய வாழ்வு. சென்னை: பாரதி பதிப்பகம். 6 பதிப்பு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகாசனம்&oldid=3421150" இலிருந்து மீள்விக்கப்பட்டது