தனுராசனம்
தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைப்பதால் இந்த யோகசனத்திற்குத் தனுராசனம் என்ற பெயர் ஏற்பட்டது.[1] பஸ்சிமோத்தாசனத்திற்கு மாற்று யோகாசனம் இது.
செய்முறை
தொகு- விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- இரு கால்களையும் முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்றாகத் தூக்கிக் கொண்டு சில முறை பயிற்சி செய்துவிட்டுப் பின்னர் இரு கால்களையும் முழங்காலை மடக்கித் தூக்கிய வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும்.
- அப்படியே கால்களைத் தலைக்கு நேராகக் கொண்டு வந்த வண்ணமே தலையையும், நெஞ்சுப் பகுதியையும் மேல் நோக்கித் தூக்கிக்கொள்ள வேண்டும்.
- இரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். :முழங்கால்கள் ஒட்டி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. :வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும்.
- சுவாசம் இயல்பாக இருத்தல் நலம்.
பலன்கள்
தொகுஇதைத் தொடர்ந்து செய்தால் தொந்தி குறைவதோடு, இடுப்பு, தொடைகளின் சதைகளும் கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப் படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படும். அதிகப்படியான பிராணவாயு கிடைக்கும். வயிற்றுத் தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்த்மா நோயாளிகளுக்குப் பலனளிக்கும். இந்த ஆசனமும் நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
சாப்பிட்டதும் இந்த ஆசனம்செய்யக் கூடாது. மேலும் ஆபரேஷன் செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
ஆதாரங்கள்
தொகு- ↑ எஸ். ரவி (21 சூன் 2017). "சிறார்களுக்கான சூப்பர் யோகாசனங்கள்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
- மாதவிடாய் பிரச்னைகள் தீர தனுராசனம், தினமணி, நாள்: ஜூலை 21, 2015
- தனுராசனம் பரணிடப்பட்டது 2015-12-20 at the வந்தவழி இயந்திரம், மாலைமலர்