மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) இந்தியாவின் இலக்னோவில் உள்ள பலபிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வகமாகும். இங்கு உயிரியல் மருத்துவ அறிவியலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். பேராசிரியர் தபஸ் குமார் குண்டு, மூலக்கூறு உயிரியலாளர், கல்வியாளர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசைப் பெற்றவர், மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய இயக்குநராக உள்ளார்.

Central Drug Research Institute
வகைதன்னாட்சி|அரசு|அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
உருவாக்கம்1951
நிதிநிலை700 கோடி (US$88 மில்லியன்) (2021–2022) [1]
பணிப்பாளர்தபசு குமார் குண்டு
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்http://www.cdri.res.in/
1951 இல் சத்தர் மன்சில்

வரலாறு

தொகு

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட முதல் ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் முப்பத்தொன்பது ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1951 பிப்ரவரி 17 அன்று அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.[2]

பிரிவுகள்

தொகு

நிர்வாக மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக இந்நிறுவனத்தில் 17 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளும், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆதரவை வழங்கும் பல பிரிவுகளும் செயல்படுகின்றன. பின்வரும் பிரிவுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளன:

  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • மருத்துவ மற்றும் பரிசோதனை மருத்துவம்
  • புற்றுநோய் உயிரியல்
  • உட்சுரப்பியல்
  • நொதித்தல் தொழில்நுட்பம்
  • மருத்துவ மற்றும் செயல்முறை வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • நரம்பியல் மற்றும் வயதான உயிரியல்
  • ஒட்டுண்ணியியல்
  • மருந்தியல் பிரிவு
  • பார்மகோகினெடிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றம்
  • மருந்தியல்
  • நச்சுயியல்
  • ஆய்வக விலங்குகள்

கூடுதலாக, ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வெளியே அமைந்துள்ள இரண்டு தரவு மையங்கள் மற்றும் ஒரு கள ஆய்வு நிலையமும் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

சாதனைகள்

தொகு
  • செண்ட்குரோமன்/ஓர்மெலொக்சிபென் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.indiabudget.gov.in/doc/eb/sbe45.pdf
  2. cosmic. "CDRI | Home". cdri.res.in. Archived from the original on 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "CSIR-CDRI | Home". cdri.res.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.

வெளி இண் ஐப்புகள்

தொகு