அயோடின் குறைபாடு

அயோடின் குறைபாடு என்பது அருகிய தனிமமான அயோடின் இல்லாமையைக் குறிக்கும். இக்குறைபாடு கழுத்தில் முன்பும் பக்கவாட்டிலும் தைராயிடு வீக்கத்தையும் தைராயிடுச் சுரப்புக் குறைபாட்டையும் விளைவிக்கும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் நலவாழ்வுச் சிக்கல்களும் உருவாகும்.அயோடின் குறைபாடு அறிதிறன் குறைபாட்டையும் உருவாக்குவதால் இது ஒரு பொது நலவாழ்வு வினாவாகும்.[1]

அயோடின் குறைபாடு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅகச்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E00.E02.
நோய்களின் தரவுத்தளம்6933
ஈமெடிசின்மருத்துவம்/1187

நோய்க்காரணமும் நோய்நாடலும்

தொகு

அயோடின் ஒரு முதன்மையான அருந்தனிமம் ஆகும்; தைராயிடு இசைமங்களாகிய தைராக்சின் மூவயடோத்ய்ரொனைன் இரண்டிலும் அயோடின் உள்ளது. அயோடின் குறைபாடு மண்ணின் குறைபாடு ஆகும். மண்ணின் மேற்பரப்பில் இருந்த அயோடின் தட்ப வெட்ப காரணமாக குறிப்பாக வெள்ளம் காரணமாக கடலில் சென்று கலந்து விட்டது. மண்ணின் மேற்பரப்பில் போதுமான அளவு அயோடின் இல்லாத காரணத்தால் மண்ணில் வளரும் தாவரங்களிலும் மனிதனுக்கு போதுமான அளவு அயோடின் இருப்பதில்லை. தாவரங்களில் போதுமான அளவு அயோடின் இல்லாத காரணத்தால் அதை உண்டு வாழும் விலங்குகளிலும் மற்றும் தாவரங்களையோ அல்லது இவை இரண்டையுமோ உண்டு வாழும் மனிதர்களுக்கு போதுமான அளவு அயோடின் கிடைப்பதில்லை.

தவிர்ப்பும் பண்டுவமும் (சிகிச்சையும்)

தொகு

இந்தக் குறைபாட்டைத் தவிர்க்க, அயோடின் ஊட்டிய உப்பைப் பயன்படுத்தலாம். மேலும் மாவு, தண்ணீர், பால்போன்ற உணவுப் பொருள்களில் அயோடின் சேர்மங்களை சேர்த்துக் கொள்ளலாம்.[2]

நோயிடரியல்

தொகு

அயோடின் குறைபாடு 2010 ஆய்வின்படி 18.7 கோடி (2.7 விழுக்காடு) மக்களில் அமைந்துள்ளது. இதனால் அவர்களுக்குக் கழுத்தில் தைராயிடு வீக்கம் ஏற்படுகிறது.[3] இதனால் 1990 இல் 2100 ஆக இருந்த இறப்பு 2013 இல் 2700 ஆக உயர்ந்துள்ளது.[4]

குறிகளும் அறிகுறிகளும்

தொகு

கழுத்துக் கழலை அல்லது வீக்கம்

தொகு

குருதியில் உள்ள இரு தைராயிடு இசைமங்களில் (Hormones) ஒன்றான தைராக்சின் சுரப்பு, அயோடின் குறையும்போது உருவாகாமல் போவதால் இந்நிலை உயர் தைராயிடு சுரக்கவைக்கும் இசைமங்களைத் தூண்டிவிட்டு உயிர்வேதி வினைகளை வேகப்படுத்திவிடும். எனவே உயிர்க்கல வளர்ச்சியும் கூடுதலாகி தைராயிடு நாள வீக்கம் அல்லது கழலையை உருவாக்கும் மிகக்குறைவான அயோடின் குறைபாடு நிலவும்போது, மூவயோடியொதைரோனைன் மட்டங்கள் (T3), லெவோதைராக்சி மட்டங்கள் குறைந்துள்ளபோது, உயரும். ஏனெனில், குறைவை ஈடுகட்ட, உடம்பு லெவோதைரக்சினின் பெருமளவை மூவயடோதைராக்சினாக மாற்றிவிடுகிறது. இவ்வகை நோயாளிகளுக்கு பருத்தல் குறைந்த கழலை ஏற்படும். வளர்ந்த நாடுகளில் 1900களில் அயோடின் நிரப்பூட்டம் தரத் தொடங்கிவிட்ட்தால் இந்நிலை பரவலாகக் குறைந்துவிட்டது.; என்றாலும், ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்த்லும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்னமும் அயோடின் குறைபாடு கணிசமான நலவாழ்வுச் சிக்கலாகவேஉள்ளது.[5] மூன்றாம் உலக நாடுகளில் இது மேலும் பரவல்லாக நிலவுகிறது.. இதயநாள நோயைக் குறக்க மேற்கொண்ட நலவாழ்வு நடவடிக்கையால் விரும்பும் அயோடினைப் பயன்படுத்தல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கூடுதலாக, மேலைநாடுகளில் பதப்படுத்திய உணவை உட்கொள்ளுதலும் கூடிவிட்டது. இவ்வகை உணவுகளில் பயன்படும் அயோடினற்ற உப்புகள் சமையலின்போது உப்பைக் கூட்டும் வழிமுறையைத் தடுத்துவிட்டது.

குறிப்பிட்ட வட்டார மக்கள்தொகையில் 5% அளவுக்கும் மேல் கழுத்துக் கழலை காணப்பட்டால் அது நோயிடரியல் தன்மையுடையதாக்க் கருதப்படும். பெரும்பாலும் இதை அயோடின் நிரப்பூட்டத்தால் தீர்க்கலாம். கழுத்துக் கழலைக்கு ஐந்தாண்ட்களுக்கும் மேல் மருத்துவம் பார்க்காவிட்டால், தைராயிடு நாளப் பருத்தலை அயோடின் அல்லது தைராக்சின் கொடுத்து தீர்க்க முடியாது. ஏனெனில் இந்நிலையில் தைராயிடு நாளம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும்.

வளர்ச்சிக் குன்றல் அல்லது வளர்ச்சிக் குறண்மை

தொகு

அயோடின் குறைபாடு என்பது உலகளாவிய நிலையில் தவிர்க்கமுடிந்த உள ஊனங்கள் ஏற்படுத்தும் முதன்மையான காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது அறிதிறன் ஈவை 10 முதல் 15 வரை குறைக்கவல்லதாயுள்ளது. இனக்குழுக்களின் அறிதிறன் வேறுபாட்டிற்கான காரணம் அயோடின் குறைபாடும் பிற நுண்ணூட்டக் குறைபாடுமே எனக் கருதப்படுகிறது.

வளர்ச்சிக் குன்றல் அல்லது குறண்மை (Cretinism) அயோடின் குறைபாட்டுடனும் கழுத்துக் கழலையுடனும் இணைந்த ஒரு வளர்ச்சிக் கறைபாடாகும். இதனால் உடல், மன வளர்ச்சிய்யொடு அறிதிறனும் குன்றும். காதுகேளாமை, ஒன்றரைக் கண் நிற்றல் தடுமாற்றம், க்ழுத்துக் கழலை, குன்றிய உடல்வளர்ச்சி, மீத்தைராயிடியம் (hypothyroidism) போன்ற அறிகுறிகள் ஏர்படும். பாராசெல்சசு தான் முதன்முதலாக கழுத்துக் கழலை உள்ள பெற்றோருக்கும் மனவளர்ச்சி குன்றிட சிறுவருக்கும் உள்ள உறவைச் சுட்டிக் காட்டினார்.[6]

பத்திய உணவு, தனிமைப்படுதல், புறக்குழு மணம் ஆகிவற்றின் விளைவுகளாலும் உணவில் அமையும் அயோடின் குறைபாடும் குழந்தைகள் வேடிக்கையான குன்றிய உடல் வளர்ச்சியும் ஒடுங்கிய உளவளர்ச்சியும் கொண்டு பிறக்கின்றனர். இந்நிலை பிறகு தைராயிடுச் சுரப்புக் குறைவால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது. டெனிசு திதெரோ, தன் 1754 கலைக்களஞ்சியத்தில், இந்தவகை நோயாளிகளை "குறளையர்கள்" என்றார். பிரெஞ்சு மொழியில் ஆல்ப்சுக் குறளையர்கள் என்ற சொல்லும் நடைமுறைக்கு வந்த்து. ஏனெனில் நெடுந்தொலைவு "ஆல்ப்சுக் கணவாயில்" இந்நிலை நிலவியதாம். இச்சொல் ஆங்கிலத்தில் 1779 இல் தோன்றியது.

உலகளாவிய நிலையில் அயோடின் குறைபாடு எப்படி வெற்றியோடு எதிகொள்ளப்படுகிறது என அறிவிப்பதோடு மேலும் இலான்செட் இதழ் கூறுவதாவது: "உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையின்படி, 2007 இல் ஏறத்தாழ 200 கோடி மக்கள் அயோடின் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். மேலும் அதில் மூன்றில் ஒரு பங்கினர் பள்ளிசெல்லும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கணம், உள ஒடுக்க நலிவுதவிர்க்கும் சிக்கலாக அயோடின் குறைபாடு தனித்து விளங்குகிறது. எனஃவே இது மாபெரும் பொது நலவாழ்வுச் சிக்கலாகும்."[7] (மேலும் இங்கு ஒரு தகவலைக் கூறியே ஆகவேண்டும். இப்போது "உள ஒடுக்கம்" என்ற சொல்லுக்கு மாற்றாக "அறிதிறன் குறைபாடு " எனும் சொல் வழக்கிற்கு வந்துள்ளது".)

நார்ப்புற்று மார்பக மாற்றங்கள்

தொகு

அயோடின் குறைபாடு மார்பகத் திசுக்களில் பெண்பாற்சுரப்பைத் தூண்டி மார்பகப்புற்று உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறது என்பதற்கான தொடக்கநிலைச் சான்றுகள் உள்ளன.[8][9] மார்பகப்புற்று மாற்றங்கள் தலைப்படும் பெண்களில் அயோடின் நிரப்பூட்டம் தருவது மார்பகப்புற்று, நார்த்திசுப் புடைப்பு, முலைவலி ஆகியவற்றைக் குறைக்கவல்லது எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[8][10]

உயிரியலில் அயோடினின் மார்பகப்புற்றுக் காப்பு விளைவுகள், நோயிடரியல் ஆய்வுச் சான்றுகளில் இருந்தும் விலங்குகளில் நடத்திய பதக்கூறு ஆய்வுகளில் இருந்தும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.[11][12][13] மார்பகத்திசுக்களில் அயோடினின் நோயெதிர்ப்பு இயல்புகளால், மார்பகப் புற்று நீக்கத்துக்கு மூலக்கூற்றுவகை அயோடின் நிரப்பூட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.[13]

அயோடின் குறைபாடுள்ள மக்கள்தொகை

தொகு

உணவில் அயோடின் உட்கொள்ளப்படாத பகுதிகளில். குறிப்பாக கடலுணவு உண்ணப்படாத உள்நாட்டுப் பகுதிகளிலும் வறண்ட புவிநடுவரை நாடுகளிலும் அயோடின் குறைபாடு மீத்தைராயிடியத்தை உருவாக்குகிறது. இது அயர்வு, கழுத்துக்கழலை, உள ஒடுக்கம், உள இறுக்கம், எடைகூடுதல், தாழ்ந்த அடிப்படை உடல் வெப்பநிலைபோன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது.[14]

தவிர்க்கமுடிந்த மன ஒடுக்கத்துக்கான காரணியாக அயோடின் குறைபாடேஅமைகிறது. இந்நிலை முதன்மையாக குழந்தைகளும் சிறுவர்களும் அயோடின் குறைபாட்டால் மீத்தைரயிடியம் உறும்போது உருவாகிறது. உணவு உப்பில் அயோடின் சேர்த்து உண்ணும்போது வளமான நாடுகளில் இச்சிக்கல் தீர்க்கப்படுகிறது. ஆனால் 2006இன் நிலவரப்படி, அயோடின் குறைபாடு வளரும் நாடுகளில் இன்னமும் அரிய பொது நலவாழ்வுச் சிக்கலாகவே உள்ளது.[15]

ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் அயோடின் குறைபாட்டுச் சிக்கல் நிலவுகிறது செருமனியில் ஓராண்டுக்கு 100கோடி டாலர் நலவாழ்வுச் செலவினத்தை ஏற்படுத்துகிறது.[10] ஒரு சமூகப்படிம்ம ஆய்வின்படி, இங்கிலாந்தில் கருவுற்ற பெண்களுக்கு அயோடின் நிரப்பூட்டம் அனைவருக்கும் தருவதால், அதாவது, ஒரு பெண்மணிக்கு £199 (2013 மதிப்பு) நலவாழ்வுக்காகச் செலவிட்டால், ஒருவருக்கு £4476 மதிப்புக்கு சமூகச் செலவினத்தைக் குறைக்கலாம் அல்லது மீத்தமுடியும் எனத் தெரியவந்துள்ளது.[16]

வாய், உமிழ்நீர் நாள நோய்களைத் தீர்ப்பதிலும் தவிர்ப்பதிலும் சீரிய பங்காற்றுகிறது.[17]

வாய்ப்புள்ள இடர்க் காரணிகள்

தொகு

அயோடின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ள இடர்க் காரணிகள் கீழே தரப்படுகின்றன:[18]

  1. அயோடின் குறைந்த உணவு
  2. செலினியம் குறைபாடு
  3. கருத்தரிப்பு
  4. கதிர்வீச்சுக்கு ஆட்படுதல்
  5. கால்சியம் போன்ற தைராயிடு வீக்கம் ஈனிகளை உட்கொள்ளல்
  6. பாலினம் (பெண்களில் கூடுதலாக ஏற்படுதல்)
  7. புகையிலை புகைத்தல்
  8. சாராயம் (குடிப்பவர்களிடம் அயோடின் குறைபாடு குறைவாக உள்ளது)
  9. வாய்வழி கருத்தடுப்பிகள் (இவர்களிடம் அயோடின் குறைபாடு குறைவாக உள்ளது)
  10. பர்குளோரேட்டுகள்
  11. தயொசயனேட்டுகள்
  12. அகவை (ஒவ்வொரு அகவையிலும் ஒருவகை அயோடின் குறைபாடு நிலவுகிறது)

மிகையளவாகப் போய்விடப்போகிறதென்ற அச்சத்தாலும் அயோடின் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கையாலும் 20ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்து அயோடின் குறைந்த அளவில் உட்கொள்ளப்படுகிறது. மாற்றாக, புரோமினும், பர்க்குளோரேட்டும் புளூரைடும் வழக்கில் உள்ளன.[19] குறிப்பாக, 1980 வக்கில் பொட்டாசியம் அயோடைடுக்கு மாற்றாக அடுபொருள்களில் படிப்படியாக புரொமைடு போன்ற பிற பதன்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.[20]

நோய் உடலியங்கியல்

தொகு

அயோடின் T4 இன் மூலக்கூற்று எடையில் 65% அளவும் T3 இன் மூலக்கூற்று எடையில் 59% அளவுமாக அமைகிறது. 15–20மிகி அயோடின் தைராயிடு திசுக்களிலும் இசைமங்களிலும்செறிந்துள்ளது. எஞ்சிய 70% அளவு உடலின் பிறபகுதிகளில் விரவியுள்ளது.அவையாவன:பால்நாளங்கள், கண்கள், வயிற்று சளிமம், கருப்பைக்கழுத்து, உமிழ்நீர் நாளங்கள். இத்திசுக்களின் உயிர்க்கலங்களில் நேரடியாக சோடியம் அயோடைடாக அதாவது, (NIS) ஆக அமைகிறது.

நோய்நாடல்

தொகு

ஐயுறவுள்ள பகுதியின் அயோடின் குறைபாட்டு நோய்நாடல் பணி (Diagnostic workup) குறிகளையும் அறிகுறிகளையும் மேற்கூறிய வாய்ப்புள்ள இடர்க்காரணிகளையும் உள்ளடக்கவேண்டும். 24 மணிநேரச் சிறுநீரில் உள்ள அயோடின் கண்டறிதல் ஒரு பயனுள்ள ஆய்வாகும். ஏனெனில் 24 மணிநேரத்துக்குள் 90% அளவு உட்கொண்ட அயோடின் சிறுநீரில் வெளியேற்றப்படும்.[21] செந்தர 24 மணிநேர ஆய்வுக்கு 50 மிகி அயோடின் உட்கொள்ளச் செய்து, டுத்த 24 மணிநேரத்துக்குள் 90% அளவு அயோடின் சிறுநீரில் இருந்து மீட்கப்பட வேண்டும். 90% அளவைவிடக் குறைந்த அளவு உடலில் கூடுதலாக அயோடின் தேக்கப்பட்டுள்ளது எனப் பொருள்படும். அதாவது அயோடின் குறைபாடு உள்ளது எனப் உறுதிப்படும். கருவுற்றுள்ளபோது மீட்பு குறையும். அதேபோல, கழலைமருந்து உட்கொள்ளுதலும் ஆய்வு முடிவுகளை மாற்றும்.[22]

சிறுநீரை 24 மணிநேரத்துக்குத் திரட்ட முடியாவிட்டால், ஒருமாற்றாக தற்போக்கில் அளந்த அயோடி-கிரியேட்டினைன் விகிதத்தைப் பயன்படுத்தலாம்.[21]

அயோடின் குறைபாடு உள்ளதா எனப் பொதுவாக அறிய தோல் அயோடின் ஆய்வுவழி காணலாம். இதில் நோயறிய வேண்டியவரின் தோல் அயோடினால் பூசப்படும். பிறகு அயோடின் கறை மறையும் நேரத்தைப் பொறுத்து அயோடின் குறைபாடு உள்ளதா இல்லையா என அறியலாம். விரைவாக்க் கறை மறைந்தால் குறைபாடு உள்ளாது எனப் பொருள்படும்.என்றாலும் கறை மறையவேண்டிய நேரம் குறித்த செந்தரம் ஏதும் இல்லை. அடர்நிறமுள்ள தோலில் கறை மறைவதைக் காணல் அரிது. இச்சோதனைக்குப் பிரகு சிறுநீராய்வு செய்தால் உடைலி கரைந்த அயோடினால் அய்வு முடிவுகள் மாறும்.[22]

பண்டுவம் (சிகிச்சை)

தொகு
 
அயோடின் நிரப்புகள்

முன்கணித்தல்

தொகு

அயோடின் நிரப்பூட்டம் தந்தால், சிறுவர்களிலும் கருவுற்ற பெண்களிலும் அயோடின் குறைபாட்டால் ஏற்பட்ட கழுத்துக் கழலை அளவில் குறைகிறது. எனினும் பொதுவாக அயோடின் குறைபாட்டால் உருவாகிய நாட்பட்ட கழுத்துக்கழலைகளில் அயோடின் நிரப்பூட்டத்துக்குப் பின்னர் அவை ஓரளவே சுருங்குகின்றன. எனவே மீத்தைராயிடியம் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது.[21] அமெரிக்காவில் 1924 முதல் அயோடூட்ட உப்பு பயன்படுத்தத் தொடங்கியது ஒரு செந்தர விலக்கம் அளவுக்கு நிரல் (சராசரி) அறிதிறன் உயர்ந்தது. அயோடின் குறைபாட்டுப் பகுதிகளில் 15 செந்தர விலக்கம் அளவுக்கு உயர்ந்தது. தேசிய அளவில் 3.5 செந்தர விலக்கம் அளவுக்கு உயர்ந்தது. ஆனால் மீத்தைராயிடியத்தால் இறப்பு 3.5% கூடியது.[23]

ஆராய்ச்சிகள்

தொகு

பேரளவு மக்கள்தொகைகளில் அயோடின் மட்டங்களின் ஆய்வு மேற்கொள்ளவேண்டி இருப்பதால் அயோடினைப் புற ஊதாக் கதிர்க் காணல் முறையுள்ள [[நுன்புழை மின்பகுப்புமுறை முன்மொழிந்து பரிந்துரைக்கப்படுகிறது.[24]

மேற்கோள்கள்

தொகு
  1. "Global Iodine Deficiency Disorders Prevention Day - National Health Portal Of India". Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
  2. François Delange, Basil Hetzel. "The Iodine Deficiency Disorders". Thyroid Disease Manager. Archived from the original on 2008-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-29.
  3. Vos, T; Flaxman, A. D.; Naghavi, M; Lozano, R; Michaud, C; Ezzati, M; Shibuya, K; Salomon, J. A. et al. (Dec 15, 2012). "Years lived with disability (YLDs) for 1160 sequelae of 289 diseases and injuries 1990–2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010". Lancet 380 (9859): 2163–96. doi:10.1016/S0140-6736(12)61729-2. பப்மெட்:23245607. 
  4. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990–2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 385: 117–171. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  5. Andersson M, Takkouche B, Egli I, Allen HE, de Benoist B (2005). "Current global iodine status and progress over the last decade towards the elimination of iodine deficiency". Bull. World Health Organ. 83 (7): 518–25. பப்மெட்:16175826. 
  6. T. E. C. Jr. M.D. (August 1, 1974). "Paracelsus on What the Physician Should Know". Pediatrics (American Academy of Pediatrics) 54 (2): 141. http://pediatrics.aappublications.org/cgi/content/abstract/54/2/141. பார்த்த நாள்: 2008-12-05. 
  7. The Lancet (12 July 2008). "Iodine deficiency—way to go yet". The Lancet 372 (9633): 88. doi:10.1016/S0140-6736(08)61009-0. பப்மெட்:18620930. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(08)61009-0/fulltext. பார்த்த நாள்: 2008-12-05. 
  8. 8.0 8.1 Cann, Stephen A.; van Netten, Johannes P.; van Netten, Christiaan (2000). "Hypothesis: iodine, selenium and the development of breast cancer". Cancer Causes and Control 11 (2): 121–127. doi:10.1023/A:1008925301459. பன்னாட்டுத் தர தொடர் எண்:09575243. பப்மெட்:10710195. 
  9. Joseph E. Pizzorno; Michael T. Murray (14 September 2012). Textbook of Natural Medicine. Elsevier Health Sciences. p. 1371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4377-2333-0.
  10. 10.0 10.1 Patrick L (2008). "Iodine: deficiency and therapeutic considerations". Altern Med Rev 13 (2): 116–27. பப்மெட்:18590348. 
  11. "Iodine Monograph". Alternative Medecine Review 15 (3): 273–278. 2010. http://www.altmedrev.com/publications/15/3/273.pdf. பார்த்த நாள்: 2015-08-29. 
  12. Venturi S (October 2001). "Is there a role for iodine in breast diseases?". Breast (Edinburgh, Scotland) 10 (5): 379–82. doi:10.1054/brst.2000.0267. பப்மெட்:14965610. 
  13. 13.0 13.1 Aceves C, Anguiano B, Delgado G (April 2005). "Is iodine a gatekeeper of the integrity of the mammary gland?". Journal of Mammary Gland Biology and Neoplasia 10 (2): 189–96. doi:10.1007/s10911-005-5401-5. பப்மெட்:16025225. 
  14. Felig, Philip; Frohman, Lawrence A. (2001). "Endemic Goiter". Endocrinology & metabolism. McGraw-Hill Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-022001-0.
  15. "Micronutrients — Iodine, Iron and Vitamin A". UNICEF.
  16. Monahan, Mark; Boelaert, Kristien; Jolly, Kate; Chan, Shiao; Barton, Pelham; Roberts, Tracy E (2015-01-01). "Costs and benefits of iodine supplementation for pregnant women in a mildly to moderately iodine-deficient population: a modelling analysis". The Lancet Diabetes & Endocrinology. doi:10.1016/s2213-8587(15)00212-0. http://dx.doi.org/10.1016/S2213-8587(15)00212-0. 
  17. Venturi, S; Venturi, M (2009). "Iodine in evolution of salivary glands and in oral health.". Nutrition and health 20 (2): 119-34. பப்மெட்:19835108. 
  18. Knudsen N, Laurberg P, Perrild H, Bülow I, Ovesen L, Jørgensen T (October 2002). "Risk factors for goiter and thyroid nodules". Thyroid : Official Journal of the American Thyroid Association 12 (10): 879–88. doi:10.1089/105072502761016502. பப்மெட்:12487770. 
  19. Meletis, C. D. (2011). "Iodine: Health Implications of Deficiency". Journal of Evidence-Based Complementary & Alternative Medicine 16 (3): 190–194. doi:10.1177/2156587211414424. பன்னாட்டுத் தர தொடர் எண்:1533-2101. 
  20. K. Smith (24 August 1988). Trace Minerals in Foods. CRC Press. pp. 273–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-7835-4.
  21. 21.0 21.1 21.2 medscape > Iodine Deficiency Authors and editors: Stephanie L Lee and George T Griffing. Updated: Apr 22, 2009
  22. 22.0 22.1 Richard S. Lord; J. Alexander Bralley (2008). Laboratory Evaluations for Integrative and Functional Medicine. Metametrix Institute. pp. 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9673949-4-7.
  23. Max Nisen (July 22, 2013). "How Adding Iodine To Salt Resulted In A Decade's Worth Of IQ Gains For The United States". Business Insider. http://www.businessinsider.com/iodization-effect-on-iq-2013-7. பார்த்த நாள்: July 23, 2013. 
  24. Macedo, Adriana Nori de; Teo, Koon; Mente, Andrew; McQueen, Matthew J.; Zeidler, Johannes; Poirier, Paul; Lear, Scott A.; Wielgosz, Andy et al. (2014). "A Robust Method for Iodine Status Determination in Epidemiological Studies by Capillary Electrophoresis". Analytical Chemistry 86 (20): 10010–10015. doi:10.1021/ac503231u. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. பப்மெட்:25280130. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_குறைபாடு&oldid=3721661" இலிருந்து மீள்விக்கப்பட்டது