ஹர்ஷ் வர்தன்

இந்திய அரசியல்வாதி

ஹர்ஷ்வர்தன் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவர். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 27 மே 2014 முதல் 8 நவம்பர் 2014 வரை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஹர்ஷ்வர்தன் தில்லியில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஓம்பிரகாஷ் கோயெல், சிநேகலதா. தரியாகஞ்சில் உள்ள ஒரு பள்ளியில் படித்து, கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ் படிப்பும், அதே கல்லூரியில் காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் முதுகலைப் படிப்பும் முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

சிறு வயது முதலே ஹர்ஷ்வர்தன் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தவர். 1993 ஆம் ஆண்டில் தில்லியின் முதல் சட்டசபை உருவாக்கப்பட்ட போது கிருஷ்ணாநகர் தொகுதியில் வென்று, சுகாதாரம் மற்றும் சட்டத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1996 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சர் பொறுப்பும் இவருக்கு அளிக்கப்பட்டது. 1998, 2003, 2008 மற்றும் 2013 என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிக எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்த போதும் தனிப்பெரும்பான்மையில்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க இயலவில்லை.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷ்_வர்தன்&oldid=2895499" இலிருந்து மீள்விக்கப்பட்டது