குவாஜா சம்சுத்தீன்
இந்திய அரசியல்வாதி
இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
குவாஜா சம்சுத்தீன் (Khwaja Shams-ud-Din :பிறப்பு 1922 - இறப்பு 19 ஏப்ரல் 1999)சம்மு காசுமீரின், தேசிய மாநாட்டு கட்சியின் அரசியல்வாதியாவார். இவர் 12 அக்டோபர் 1963 முதல் 29 பிப்ரவரி 1964 வரை குறுகிய காலம் (140 நாட்கள்) சம்மு காசுமீர் மாநிலத்தின், நான்காவது பிரதமராக இருந்தார். [1]
அரசியல்
தொகு- 1946 இல் "காஷ்மீர் வெளியேறு இயக்கத்தில்" கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார்.
- குவாஜா முதன்முதலில் 1956 இல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967 மற்றும் 1972 இல் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதியில்,ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
- 1957 முதல் 1963 வரை பக்சி குலாம் முகமதுவின் அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
- தேசிய மாநாட்டடு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 12 அக்டோபர் 1963 முதல் 29 பிப்ரவரி 1964 வரை குறுகிய காலம் (140 நாட்கள்) சம்மு காசுமீர் மாநிலத்தின், நான்காவது பிரதமராக இருந்தார். [3]
- 1968 முதல் 1972 வரை சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
- இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களின் முதல் குழுவில் இவரும் ஒருவர்.
குடும்பம்
தொகுஇவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
சர்ச்சைகள்
தொகுகுவாஜாவின் நிர்வாகத்தின் போது, 26 டிசம்பர் 1963 அன்று, நபியின் நினைவுச்சின்னம் ஹஸ்ரத்பால் ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக குலாம் முகமது சாதிக் நியமிக்கப்பட்டார்.[4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Index Sh-Sl". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
- ↑ "tribuneindia... Jammu and Kashmir". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
- ↑ Sagar, Daya (12 November 2014). "J&K has suffered more because of ‘politicians’". State Times. http://news.statetimes.in/jk-suffered-politicians/. பார்த்த நாள்: 18 March 2018.
- ↑ "Moslems Riot Over Theft of Sacred Relic", Chicago Tribune, 29 December 1963, p1