அலெக்சாண்டர் டூமா

அலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், pronounced [a.lɛk.sɑ̃dʁ dy.ma], பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி ([dy.ma da.vi də pa.jət.ʁi]) (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870)[1] அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.

அலெக்சாண்டர் டூமா

1855இல் டூமா.
தொழில் நாடகாசிரியர், புதின எழுத்தாளர்
நாடு பிரெஞ்சு
எழுதிய காலம் 1829–1869
இயக்கம் காதல் மற்றும் வரலாற்றுப் புதினம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ்
கையொப்பம் Alexandre Dumas Signature.svg

பிரெஞ்சு பிரபுவிற்கும் ஹைத்திய அடிமைக்கும் பேரனாகப் பிறந்த டூமா இளமையில் வறுமையில் வாடியவர். கல்வி கற்கவும் வழியில்லாது கையில் கிடைத்ததை எல்லாம் படித்து வந்தார். தனது தந்தையின் வீரச்செயல்களை அன்னை மூலம் கேட்டறிந்த டூமாவிற்கு சாகசங்கள் நிறைந்த கற்பனை விரிந்தது. தமது 20வது அகவையில் பாரிசுக்கு இடம் பெயர்ந்து அங்கு அரண்மனையில் பணி புரிந்து வந்தார்.அப்போது தான் இதழ்களுக்கு கதை எழுதத் துவங்கினார். விரைவிலேயே அவரது திறமை வெளிப்பட்டு புகழ்பெறத் துவங்கினார்.

மேற்கோள்கள்தொகு

  1. Alexandre Dumas on Encarta. Archived 2009-10-31.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alexandre Dumas (père)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_டூமா&oldid=3232348" இருந்து மீள்விக்கப்பட்டது