வரலாற்றுப் புதினம்

வரலாற்றுப் புதினம் அல்லது சரித்திர நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலப் பகுதியில் நிகந்த நிகழ்வுகளையும், அக்கால மாந்தர்களையும் அடிப்படையாக வைத்து அக்காலத்துப் பின்புலத்தில் கற்பனையும் சேர்த்து எழுதப்படும் புதினம் ஆகும்.

தமிழில் வரலாற்றுப் புதினங்கள்

தொகு

தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்றுப்_புதினம்&oldid=1916653" இலிருந்து மீள்விக்கப்பட்டது