யவன ராணி (புதினம்)

யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.

யவன ராணி
நூலாசிரியர்சாண்டில்யன்
உண்மையான தலைப்புயவன ராணி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவரலாற்று நாவல்

கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.

கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.

கதைச் சுருக்கம்

தொகு

இளஞ்செழியன் சோழ நாட்டின் படைத்தலைவன். ஒருநாள் புகார் நகரின் கடற்கரையில் யவன பெண் ஒருவளை மயங்கிய நிலையில் கண்டு எடுக்கிறான். அவளை தன் மாளிகைக்கு கொண்டு செல்கிறான். அவனுடன் உதவியாளன் ஹிப்பாலாசும் வருகிறான். யவன பெண் கண் விழித்ததும் அவளிடம் அவள் யார் என்று கேட்கும் போது , சோழ படையின் மற்றோரு படை தலைவன், இளஞ்செழியன் மாளிகைக்குள் நுழைந்து யவன பெண்ணை தன்னுடன் அனுப்புமாறு சொல்கிறான் . அப்போது தான் யவன பெண் சாதாரணவளல்ல, அவள் யவன தேசத்திலிருந்து வந்து புகார் நகரில் முடி சூட வந்த யவன ராஜ குடும்பத்தின் இளவரசி என்று அறிகிறான்.

வந்த படைத்தலைவன் இளஞ்செழியனிடம் மற்றோரு அதிர்ச்சியளிக்கும் சேதியை சொல்கிறான், சோழ நாட்டின் மன்னனான இளஞ்சொட் சென்னி கொல்லப்பட்டான் மற்றும் இளவரசனான திருமாவளவன் தப்பித்து சென்றுவிட்டான் என்று. எதனை அறிந்த இளஞ்செழியன் ராணியை அனுப்ப முடித்து என்று மறுத்து எதிர்ப்பட்ட வீரர்களை தாண்டி யவன ராணியை கொண்டு செல்கிறான். ராணியை பிரம்மானந்த ஸ்வாமிகளின் மடத்திற்கு கூடி செல்கிறான். அங்கு எதிர்பாராத விதமாக இளஞ்செழியனின் மாமன் மகள் பூவழகி இருக்கிறாள். பூவழகி ஏற்கனவே இளஞ்செழியன் மீது காதல் கொண்டிருந்தாலும் சில காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். அதனை மேலும் பன்மடங்காக உயர்த்த இளஞ்செழியனை ராணியுடன் காண்கிறாள். ராணியை பிரம்மானந்தரின் அறிவுரையின் பெயரில் சமண மடத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு சமண துறவி பிரம்மானந்தரின் உளவாளி என்று அறிகிறான் , மற்றும் மடத்தின் அருகில் உள்ள மாளிகை தீக்கு இரையாகிறது. அம்மாளிகையில் திருமாவளவன் இருந்திருக்கிறான் , ஆனால் தீயில் மாண்டுபோகாமல் , காலில் மட்டும் தீப்புண் பட்டும் கால் கருகிய நிலையில் தப்பி செல்கிறான்.

மன்னன் இல்லாத சோழ நாட்டை இருங்கோவேள் , யவனர்களுடன் சேர்ந்து கைப்பற்றுகிறான். மேலும் புகார் நகரை யவனர்களுக்கு தாரை வார்க்க முடிவு செய்கிறான். ராணிக்கு துணையாக யவனர்கள் மிகச் சிறந்த படை தலைவன் டைபீரியஸ் வருகிறான். ராணி புகார் நகரை கைப்பற்றும் நோக்கில் இருந்து மாறுபட்டு இளஞ்செழியனிடம் காதல் கொண்டிருப்பதை அறிந்து , இளஞ்செழியனை புகார் நகரில் இருந்து மயக்கமுற்ற செய்து அடிமைக்கப்பலில் அனுப்புகிறான். இளஞ்செழியன் அங்கிருந்து தனது புத்தி கூர்மையால் தப்பித்து, சாம்பிராணி தேசத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து அலிமாவால் தப்பி சோழ தேசம் வருகிறான். திருமாவளவன் கரிகாலன் என்னும் பெயரோடு படை திரட்டி இருங்கோவேளை வென்று சோழ தேசத்தின் மன்னனாக முடி சூடுகிறான். யவன நாட்டிற்கு துரோகம் செய்ததற்காக டைபீரீஸ் யவன ராணியை கொல்கிறான். யவனராணி பூவழகியை இளஞ்செழியனிடம் சேர்த்துவைத்து மறைகிறாள்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யவன_ராணி_(புதினம்)&oldid=3387000" இலிருந்து மீள்விக்கப்பட்டது