தி. த. சரவணமுத்துப்பிள்ளை
எழுத்தாளர்
(த. சரவணமுத்துப்பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி. த. சரவணமுத்துப்பிள்ளை (1865 - 1902) ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.
இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சரவணமுத்துப்பிள்ளை, திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை என்பவரின் மகன். தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் தம்பி. தனது 15வது அகவையில் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தத்தைவிடு தூது என்ற பெண் விடுதலைச் செய்யுள்களையும் எழுதினார்.[1]
எழுதி வெளியிட்ட நூல்கள்
தொகு- தென்கைலாய மென்னுந் திரிகோணாசலத்திலெழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி பேரிற் சொல்லிய 'இரட்டைமணிமாலை', சென்னை சிறீநிலைய அச்சுக்கூடம், 1883
- தத்தைவிடு தூது, சென்னை சிறீநிலைய அச்சுக்கூடம், 1892
- தமிழ்ப்பாஷை, தமிழியல் ஆய்வு, 1892 (மறுபதிப்பு: 2013)
- திருக்கோணமலை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருப்பொன்னூஞ்சல், 1895
- மோகனாங்கி, 1895
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.