ஜேம்ஸ் போக்

1845 முதல் 1849 வரை இருந்த அமெரிக்க அதிபர்

ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் ((/pk/;[1]; James Knox Polk) (நவம்பர் 2 1795[2] He was the first of 10 children born into a family of farmers.[3] –சூன் 15 1849) ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார்.

ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க்
ஐக்கிய அமெரிக்காவின்11வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1845 – மார்ச் 4, 1849
துணை அதிபர்ஜார்ஜ் டல்லாஸ்
முன்னையவர்ஜான் டைலர்
பின்னவர்சக்கரி தைலர்
17வது மக்களவை மன்ற அவைத் தலைவர்
பதவியில்
டிசம்பர் 7, 1835 – மார்ச் 4, 1839
முன்னையவர்ஜான் பெல்
பின்னவர்ராபர்ட் ஹண்ட்டர்
11வது டென்னிசி ஆளுனர்
பதவியில்
அக்டோபர் 14, 1839 – அக்டோபர் 15, 1841
Lieutenantஎல்.ஹெச். கோ
முன்னையவர்நியூட்டன் கேனன்
பின்னவர்ஜேம்ஸ் சி. ஜோன்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 3, 1795
மெக்லன்பர்க் வட்டம், வடகரோலினா,வட கரோலினா
இறப்புஜூன் 15, 1849, அகவை 53
நாஷ்வில், டென்னிசி
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிடெமாக்ரட்டிக் கட்சி
துணைவர்சாரா சில்ட்ரஸ் போ(ல்)க்
சமயம்மெத்தாடிஸ்ட்
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. "Polk". Random House Webster's Unabridged Dictionary.
  2. Borneman, pp. 4–6
  3. Rawley, James A. (February 2000). "Polk, James K.". American National Biography Online. doi:10.1093/anb/9780198606697.article.0400795. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_போக்&oldid=4194824" இலிருந்து மீள்விக்கப்பட்டது