கன்னிமாரா பொது நூலகம்
சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பெறப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இஃது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. இந்நூலகம் காலை 8 முதல் இரவு 8 மணிவரை செயல்படுகிறது.[1]
கன்னிமாரா பொது நூலகம் | |
---|---|
கன்னிமாரா பொது நூலகம் | |
நாடு | இந்தியா |
வகை | பொது நூலகம் |
தொடக்கம் | 5 திசம்பர் 1896 |
அமைவிடம் | எழும்பூர், சென்னை, தமிழ்நாடு |
Collection | |
Items collected | நூல்கள், ஆய்வு இதழ்கள், இதழ்கள், புடையெழுத்து நூல்கள், கையெழுத்துப்படிகள் |
இணையதளம் | http://www.connemarapubliclibrarychennai.com/ |
Map | |
வரலாறு
தொகுகன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-இல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராஸ் மாகாணத்தின் மதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகச் சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் தொடங்கப்பட்டது.[2] இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராஸ் மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை, மதராஸ் அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
1948-ஆம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன்முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிருவகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.[3]
கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வு ஆயத்தத்துக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தறுவாயில் உள்ளது. இங்கு மொத்தம் ஆறு இலட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன.
1981-ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது.[4] நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. எனினும் கன்னிமாரா பொது நூலகம், நூலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் பதிவுபெற்ற உறுப்பினராக இல்லை.[5]
நூலகர்கள்
தொகுவ.எண். | பெயர் | உருவப்படம் | முதல் | வரை | குறிப்பு |
---|---|---|---|---|---|
01 | எட்கர் தர்ஸ்டன் | 1896 | 1908 | ||
02 | ஜே. ஆர். ஹென்டர்சன்] | 1908 திசம்பர் 4 [6] | 1920 | ||
03 | எஃப். எச். கிரேவ்லி] | 1920 பிப்ரவரி | |||
04 | இரா. சனார்த்தனம் | 1939 April [7] | 1950 | முதல் பயிற்சிபெற்ற, இந்திய நூலகர் | |
05 | கே. கோவிந்த மேனன் | 1950 | 1959 | ||
06 | கே. இராசகோபாலன் | 1959[8]-மார்ச்-1[9] | 1963 | ||
07 | வே. தில்லைநாயகம் | 1963 | 1972 சூலை 31 | முதல் தொழில்முறை நூலகர் | |
08 | அ. மு. சுந்தரராசன் | 1972 சூலை 31 | |||
09 | பொறுப்பு | ||||
10 | அ. மு. சுந்தரராசன் | ||||
11 | ந. ஆவுடையப்பன்ன் | ||||
12 | பி.ஏ. நரேசு | ||||
13 | பி. நாராயண பட் | ||||
14 | பி. மீனாட்சிசுந்தரம் | 2016 ஆகத்து | 2018 சூன் 30 | ||
15 | எஸ். ரசனி | 2018 சூன் 30 | 2019 சூன் | ||
16 | எம். கணேசா | 2019 சூலை |
வெளி இணைப்புகள்
தொகு- கன்னிமாரா பொதுநூலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2007-09-11 at the வந்தவழி இயந்திரம்
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ "சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!". 2023-08-22.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Patel, Jashu (2001). Libraries and Librarianship in India. Westport, Connecticut: Greenwood Press. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-29423-5.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Bhattacharjee, R. (2002). "Public Library Services in India: Systems and Deficiencies". Country Report: India—2002. International Federation of Library Associations and Institutions. Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 1-Jul-2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Taher, Mohamed (1994). Librarianship and library science in India: an outline of historical perspectives. Concepts in communication informatics & librarianship. Vol. 60. New Delhi: Concept Publishing Company. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-524-9.
- ↑ Ramanathan, M. (16–31 May 2010). "A user's view of Connemara Library". Madras Musings XX (3). http://madrasmusings.com/Vol%2020%20No%203/a-users-view-of-connemara-library.html. பார்த்த நாள்: 1-Jul-2012.
- ↑ Order no,162, December 4, 1908; Fort St. George Gazette No.50, December 15, 1908, page 1
- ↑ Fort St. George Gazette, dated 11 April 1939, page 393
- ↑ The Fort St. George Gazette, No.19, Madras, wednesday, May 13, 1959; Part 1-B- Educational, page 280 as per SRO No. C75 of 1959
- ↑ The Fort St. George Gazette, No.24, Madras, wednesday, June 17, 1959; Part 1-B- Educational, page 362 as per SRO No. C95 of 1959