நூலகர் (librarian) என்பவர் நூலகமும் தகவல் அறிவியலும் துறையில் பயிற்சி பெற்ற தகவல் நிபுணர் ஆவார். பழமையாக நூலகர் என்பவர் ஒரு நூலகத்தில் நூல்களை கையாளும் செயற்பாட்டை மேற்கொள்பவராவார் ஆனால் நவீன நூலகர் பல்வேறுபட்ட தகவல் வளங்களை கையாளும் பணியை மேற்கொண்டு தகவல் விஞ்ஞானியாக செயற்படுகின்றார். பணியாற்றும் நூலகங்களின் வகைகளுக்கு ஏற்ப அங்கு பணிபுரியும் நூலகரின் வகையும் மாற்றமடையும்.

நூலகர், 1556 ஓவியம் (யூசெப் ஆர்ச்சிம்போல்டோ)
 நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் நூலகர் என்பவர் தனது தனித்தன்மையால் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கோ அல்லது வளர்ச்சி பணியில் நாட்டம் கொண்ட வாசகர் வட்டத்தலைவரை தேர்ந்தெடுத்து நூலகத்தின் பயன்களை பொது மக்கள் மாணவர்கள் தெரிந்து கொள்ள வைத்து நூலகத்தின் வளர்ச்சியில் பஙகளிக்க செய்ய வேண்டும்..

நூலகத்தந்தை சீயாழி இராமாமிர்த அரங்கநாதன் அய்யா அவர்களின் கூற்றுப்படி நூலகத்திற்கு வரும் வாசகர்களை நூல்கள் தேடும் நேரத்தை மிச்சபடுத்தவும் (காலம் கருதுக) ,நூலகத்தில் இருக்கும் நூலுக்கு ஓரு ஆள்,ஆளுக்கு ஓரு நூல் மற்றும் நூலக பணிகள் மக்களை சென்றடைய நூலகம் வளரும்..என அவர் வகுத்த ஐந்து விதிகளை ஒரு நூலகர் பின்பற்றி பணி செய்தாலே நூலகர்,நூலகங்கள் தன்னிறைவு பெறும்

நூலகருக்கான படிப்புகள்

தொகு

இந்தியாவில் நூலகர் பணியிடங்களுக்கு உதவக் கூடிய வகையில் சில பல்கலைக்கழகங்கள் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளைக் கொண்டுள்ளன. சில பல்கலைக்கழகங்களில் இதற்கான சான்றிதழ் பயிற்சியும் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்புக்கு ஏதாவது பட்டப்படிப்பும், முதுகலைப் படிப்புக்கு இளங்கலை நூலக அறிவியல் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு இளங்கலை நூலக அறிவியல் பட்டமும் கல்வித் தகுதியாக உள்ளன. சான்றிதழ் படிப்புகளுக்கு மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் நூலகவியல் படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள்

தொகு

தமிழ்நாடு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலகர்&oldid=4043228" இலிருந்து மீள்விக்கப்பட்டது