பிராண்ஸ் போவாஸ்
பிராண்ஸ் போவாஸ் (Franz Boas, ஜூலை 9, 1858 – டிசம்பர் 21, 1942) ஒரு செருமானிய அமெரிக்க மானிடவியலாளர். இவர் தற்கால மானிடவியலின் முன்னோடி ஆதலால் அமெரிக்க மானிடவியலின் தந்தை எனப்படுகிறார். பிற முன்னோடிகளைப் போலவே இவரும் வேறு துறையிலேயே பயிற்சி பெற்றார். இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதன் பின்னர் இவர் புவியியல் துறையில் ஆய்வுகள் செய்தார். மனிதப் பண்பாடுகளையும், சமுதாயங்களையும் ஆய்வு செய்வதில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இவர் புகழ் பெற்றார்.
பிராண்ஸ் போவாஸ் | |
---|---|
பிறப்பு | வெஸ்ட்பாலியா, ஜெர்மனி | சூலை 9, 1858
இறப்பு | நியூயோர்க் | திசம்பர் 21, 1942
கல்வி | இயற்பியலில் முனைவர் பட்டம், கீயெல் பல்கலைக்கழகம் (1881) |
பணி | மானிடவியலாளர் |
பெற்றோர் | மெயர் போவாஸ் (1823-1899), சோபீ மேயெர் போவாஸ் (1828-1916) |
வாழ்க்கைத் துணை | மாரி கிரக்கோவிசெர் போவாஸ் (1861-1929) |
பிள்ளைகள் | ஹெலென் போவாஸ் யம்போல்ஸ்கி (1888-1963)
ஏர்ண்ஸ்ட் பிலிப் போவாஸ் (1891-1955) ஹெட்விக் போவாஸ் (1893/94) கேர்ட்ருட் போவாஸ் (1897-1924) ஹென்றி ஹேர்பேர்ட் டொனால்ட்சன் போவாஸ் (1899-1925) மாரீ பிரான்சிஸ்கா போவாஸ் (1902-1987) |