மாத்தறைக் கோட்டை
மாத்தறைக் கோட்டை (Matara Fort) 1595 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, பின் காலி கைப்பற்றப்பட்ட பிறகு ஒல்லாந்தரால் 1640 இல் மீளவும் கட்டப்பட்டது. இக்கோட்டை பெரிய கற்சுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதோடு, நிலவை கங்கையையும் கடலையும் பிரிக்கும் நிலக்கூம்பையும் கொண்டு கட்டப்பட்டது.
Matara Fort | |
---|---|
பகுதி: மாத்தறை | |
மாத்தறை | |
ஆள்கூறுகள் | 5°56′54″N 80°32′55″E / 5.948304°N 80.548485°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1595 |
கட்டியவர் | போர்த்துக்கேயர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல் பாறைகள், பவளப் பாறை |
சண்டைகள்/போர்கள் | மாத்தறைக் கலகம் |
போர்த்துக்கேயர் முதலாவது அரணை 1595 இல்[1] கோட்டை இராச்சிய ஆட்சியாளர் தர்மபாலாவின் உதவியுடன் கட்டினர்.[2] போர்த்துக்கேயரிடமிருந்து 1640 இல் ஒல்லாந்தர் மாத்தறையைக் கைப்பற்றினர்.[3] தற்போதுள்ள அரணை 1645 இல் கட்டினர்.[2] இக்கோட்டை 240 m (790 அடி) நீளமும், 13 m (43 அடி) கனமும், 5 m (16 அடி) உயரம் கொண்டு, உள்ளூர் சுண்ணக்கற்கள், கருங்கற்கள், பவளப்பாறை கொண்டு கட்டப்பட்டது.[1][3]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Balasubhramaniam, Shanthini (20 February 2006). "Conservation and Maintenance plan for Residential buildings within the Main Dutch Fort of Matara Matara, Sri Lanka" (PDF). Lund University. பார்க்கப்பட்ட நாள் 27 August 2014.
- ↑ 2.0 2.1 "Matara Fort". Department of Archaeology (Sri Lanka). 5 சூன் 2014. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2014.
- ↑ 3.0 3.1 De Silva, R. Rajpal Kumar (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602-1796: A Comprehensive Work of Pictorial Reference With Selected Eye-Witness Accounts. Colombo: Serendib Publications. pp. 174–179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-08979-9.