ஒல்லாந்தர் கால இலங்கை

சிலோன் (Ceylon) என்று அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை கிபி 1656 முதல் கிபி 1796 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகமாகவிருந்தது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடச்சுக் குடியரசு ஐரோப்பிய நாடுகளிடையே வாணிப, திறன்மிக்க சக்திகளில் ஒன்றாக உருவாகியது. இடச்சு துணிச்சலான கடற்பயணத்தைத் தெரியாத கடலிற்கும் நிலத்திற்கும் மேற்கொண்டு சிறப்புப் பெற்றது. 1602 இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அல்லது ஐக்கிய டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி உருவாக்கப்பட்டது.[1] சில தசாப்தங்களில் இது பரந்தளவிலான இடங்களை தென்னாப்பிரிக்கா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்தி, குறிப்பிடத்தக்கக் குடியிருப்புக்களை இந்தியா, மலேசியா, சப்பான், சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை போர்த்துக்கேயராலும், சிங்கள அரசாலும் பகுதி பகுதியாக ஆளப்பட்டு, இரண்டு ஆட்சியாளர்களும் அடிக்கடி மோதிக் கொண்டிருந்தனர்.

இடச்சு இலங்கை
Zeylan
1656–1796
கொடி of இடச்சு இலங்கை
கொடி
சின்னம் of இடச்சு இலங்கை
சின்னம்
நிலைகுடியேற்ற நாடு
தலைநகரம்கொழும்பு
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ், இலங்கை இடச்சு, இடச்சு
அரசர் 
ஆளுனர் 
• 1640
வில்லியம் யேக்கப்ஸ் கொஸ்டர் (முதலாவது)
• 1794-1796
யே. யி. வான் ஏஞ்சல்பீக் (கடைசி)
வரலாற்று சகாப்தம்பேரரசுவாதம்
• கொழும்பை இடச்சு இணைத்தல்
12 மே 1656
• கொழும்பை பிரித்தானியா இணைத்தல்
16 பெப்ரவரி 1796
முந்தையது
பின்னையது
போர்த்துக்கேய இலங்கை
சீதவாக்கை இராட்சியம்
கண்டி இராச்சியம்

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புக்கள்

தொகு
  1. "Homepage - History - VOC/Dutch East India Company - WolvenDaal". Archived from the original on 12 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லாந்தர்_கால_இலங்கை&oldid=3547007" இலிருந்து மீள்விக்கப்பட்டது