போக்லாந்து தீவுகள்

போக்லாந்து தீவுகள் (Falkland Islands, தமிழக வழக்கு:பாக்லாந்து தீவுகள்) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். ஆர்ஜென்டீனாவின் கரையிலிருந்து 300 மைல் (483 கிமீ) தொலைவிலும் தெற்கு யோர்சியாவின் சாங் பாறைகளிலிருந்து 671 மைல் (1,080 கிமீ) மேற்காகவும் பிரித்தானிய அண்டார்டிக் மண்டலத்திலிருந்து 584 மைல் (940 கிமீ) வடக்காகவும் அமைந்துள்ளது. போக்லாந்து தீவுகள் கிழக்கு போக்லாந்து தீவு, மற்றும் மேற்கு போக்லாந்து தீவு என்ற முக்கிய இரண்டு தீவுகளையும் 776 சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது[2].

போக்லாந்து தீவுகள்
Falkland Islands
கொடி சின்னம்
குறிக்கோள்: "சரியானதை விரும்பு" (Desire the right)
நாட்டுப்பண்: "இராணியைக் கடவுள் காப்பாராக"
தலைநகரம்சுடான்லி
51°42′S 57°51′W / 51.700°S 57.850°W / -51.700; -57.850
பெரிய நகர் சுடான்லி
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
 •  நாட்டின் தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்
 •  ஆளுநர் நைஜல் ஹேவுட்
 •  பிரதம நிர்வாகி டிம் தொரொகுட்[1]
பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
 •  விடுதலை நாள் ஜூன் 14 1982 
பரப்பு
 •  மொத்தம் 12,173 கிமீ2 (162வது)
4,700 சதுர மைல்
 •  நீர் (%) 0
மக்கள் தொகை
 •  யூலை 2005 கணக்கெடுப்பு 3,060 (226வது)
 •  அடர்த்தி 0.25/km2 (240வது)
0.65/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $75 மில்லியன் (223வது)
 •  தலைவிகிதம் $25,000 (2002 மதிப்பீடு) (தரப்படுத்தவில்லை)
நாணயம் போக்லாந்து பவுண்டு1 (FKP)
நேர வலயம் (ஒ.அ.நே-4)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே-3)
அழைப்புக்குறி 500
இணையக் குறி .fk
1Fixed to the சுடேலிங் பவுண்டுடன் இணைக்கப்பட்டுள்ளது (GBP).

கிழக்கு போக்லாந்து தீவில் அமைந்துள்ள சுடான்லி இதன் தலைநகராமாகும். இத்தீவுகள் சுயாட்சி அரசைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலமாகும். இருப்பினும் ஆர்ஜென்டீனா இத்தீவுகளுக்கு 1833 முதல் உரிமைக் கோரி வருகின்றது[3].

இந்த உரிமைக் கோரலுக்காக 1982 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா இத்தீவுகளை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையே இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத போக்லாந்து போர் இடம்பெற்றது. இப்போரில் ஆர்ஜென்டீனாவின் தோல்வியுடன் தனது படைகளை அது பின்வாங்கிக் கொண்டது. போர் முடிவடைந்தது முதல் மீன்பிடிக் கைத்தொழில், உல்லாசப்பிரயாணக் கைத்தொழில் என்பவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி இத்தீவுகளின் குடிகள் பிரித்தானிய குடிமக்களாக கணிக்கப்படுகின்றனர், மேலும் ஆர்ஜென்டீன குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர்[4]. இத்தீவுகளின் குடிகள் பெரும்பான்மையாக 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு குடியேறிய சுகொட்லாந்து நாட்டினரின் வம்சாவழியினராவார்கள். இத்தீவுகளின் குடிகள் ஆர்ஜென்டீனாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கின்றனர்[5].

மேற்கோள்கள்தொகு

  1. Falkland Islands Government(2007-08-30). "Falkland Islands Government appoints new Chief Executive". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-10-29. பரணிடப்பட்டது 2007-11-07 at the வந்தவழி இயந்திரம்
  2. "தீவுகள்: அமைவு". போக்லாந்து தீவுகள் அரச இணையத்தளம் (2007). மூல முகவரியிலிருந்து 2007-04-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-08.
  3. Argentine official claim — Origin of the sovereignty dispute பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம் (Spanish and English)
  4. de acuerdo al Derecho Positivo de la Argentina son Ciudadanos de la Nación Argentina por el solo hecho de nacer en su territorio, siguiendo el principio de Ius soli
  5. "Country Profile: Falkland Islands, Sovereignty of the Islands". Countries & Regions. Foreign and Commonwealth Office (2007-07-27). மூல முகவரியிலிருந்து 2008-04-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-04-04.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது."https://ta.wikipedia.org/w/index.php?title=போக்லாந்து_தீவுகள்&oldid=3223096" இருந்து மீள்விக்கப்பட்டது