எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு
இரண்டாம் பிலிப்பு (Philip II, எசுப்பானியம்: Felipe II «el Prudente»; 21 மே 1527 – 13 செப்டம்பர் 1598) எசுப்பானியாவின் அரசராக[1] 1556 முதல் ஆட்சி புரிந்தவர். தவிரவும் 1581 முதல் போர்த்துக்கல் அரசராகவும் ( பிலிப்பு I ஆக) 1554 முதல் நாபொலி, சிசிலி அரசராகவும் மிலன் பிரபுவாகவும் விளங்கினார். அரசி முதலாம் மேரியுடன் திருமணமான காலத்தில் (1554–58), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசராகவும் இருந்தார்.[2][3] 1555இலிருந்து நெதர்லாந்தின் 17 மாநிலங்களுக்கு பிரபுவாக இருந்தார். எசுப்பானியத்தில் "விவேகமுள்ள பிலிப்பு" (பெலிப்பு எல் புருடென்ட்) என்று அழைக்கப்பட்டார். இவரது காலத்தில் பேரரசு அப்போது ஐரோப்பியர்கள் அறிந்திருந்த அனைத்துக் கண்டங்களிலும் பரவியிருந்தது. இவரது நினைவாக பெயரிடப்பட்ட பிலிப்பீன்சு தீவுகளும் பேரரசில் அடங்கியிருந்தது. இவரது ஆட்சிக்காலத்திலேயே எசுப்பானியா அதிகாரத்திலும் தாக்கத்திலும் தனது உச்சநிலையை எட்டியது. இது சிலநேரங்களில் பொற்காலம் எனப்படுகின்றது. "சூரியன் மறையாத பேரரசு" என்ற சொலவடை இவரது ஆட்சிக்காலத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு Philip II of Spain | |
---|---|
எசுப்பானியாவின் அரசர் | |
ஆட்சிக்காலம் | 16 சனவரி 1556 – 13 செப்டம்பர் 1598 |
முன்னையவர் | சார்லசு I |
பின்னையவர் | பிலிப்பு III |
போர்த்துக்கல், அல்கார்வெசின் அரசர் | |
ஆட்சிக்காலம் | 17 ஏப்ரல் 1581 – 13 செப்டம்பர் 1598 |
முன்னையவர் | என்றி |
பின்னையவர் | பிலிப்பு III |
நேப்பிள்சு, சார்தீனியா, சிசிலி அரசர் | |
ஆட்சிக்காலம் | 25 சூலை 1556 – 13 செப்டம்பர் 1598 |
முன்னையவர் | சார்லசு IV |
பின்னையவர் | பிலிப்பு III |
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசர் (மனைவி வழியாக) | |
ஆட்சிக்காலம் | 25 சூலை 1554 – 17 நவம்பர் 1558 |
முன்னையவர் | மேரி I |
பின்னையவர் | எலிசபெத் I |
இணை-அரசி | மேரி I |
பிறப்பு | வல்லாடொலிடு, எசுப்பானியா | 21 மே 1527
இறப்பு | 13 செப்டம்பர் 1598 எல் எசுக்கோரியல், எசுப்பானியா | (அகவை 71)
புதைத்த இடம் | எல் எசுக்கோரியல் |
துணைவர் | மாரியா மானுவலா, போர்த்துகல் இளவரசி இங்கிலாந்தின் முதலாம் மேரி வலூய் இளவரசி எலிசபெத் ஆத்திரியாவின் அன்னா |
குழந்தைகளின் #குடும்பம் | கார்லோசு இசபெல்லா கிளாரா யூஜினியா காத்தரீன் மிசெல் பெர்டினன்டு டியாகோ பிலிப்பு III |
மரபு | ஆப்சுபர்கு அரசமரபு |
தந்தை | புனித உரோமைப் பேரரசின் ஐந்தாம் சார்லசு |
தாய் | இசபெல்லா |
மதம் | கத்தோலிக்க திருச்சபை |
கையொப்பம் |
பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் தனித்தனியே 1557, 1560, 1569, 1575, மற்றும் 1596 ஆண்டுகளில் அரசு திவாலானது. 1581 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கத்தோலிக்கரான பிலிப்பு சீர்திருத்தத் திருச்சபை சேர்ந்த இங்கிலாந்து மீது 1588 இல் பல கடற்படையெடுப்புக்களை எடுத்து தோல்வியுற்றார்; இத்தோல்விகள் பெரும்பாலும் புயல்களாலும் கட்டமைப்புச் சீர்கேடுகளாலும் ஏற்பட்டன.
ஆட்சிப்பரப்புகள்
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ எசுப்பானியா ஒரே அரசரைக் கொண்ட பல குறுநாடுகளாக இருந்தது; காசுத்தில்லின் இரண்டாம் பிலிப்பாக இருந்ததுடன் அரகோன் முதல் அரசராகவும் நவாரின் நான்காவது அரசராகவும் விளங்கினார்
- ↑ Geoffrey Parker. The Grand Strategy of Philip II, (2000)
- ↑ Garret Mattingly. The Armada p. 22, p. 66 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-08366-4