நவார் இராச்சியம்

நவார் இராச்சியம் (Kingdom of Navarre, ஸ்பானியம்: Reino de Navarra, பாஸ்க்: Nafarroako Erresuma, பிரெஞ்சு: Royaume de Navarre), என்பது அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக பிரனீஸ் மலைத்தொடருக்கு இரு பக்கமும் அமைந்திருந்த ஐரோப்பிய இராச்சியம். இது ஆரம்பத்தில் பம்ப்லோனா இராச்சியம் (Kingdom of Pamplona) என அழைக்கப்பட்டது.

நவார் இராச்சியம்
Kingdom of Navarre
Reino de Navarra
Nafarroako Erresuma
Royaume de Navarre
824–1620
கொடி of Kingdom of Navarre
கொடி
சின்னம் of Kingdom of Navarre
சின்னம்
தலைநகரம்பம்ப்லோனா
பேசப்படும் மொழிகள்பாஸ்க், ஸ்பானியம், பிரெஞ்சு
சமயம்
கிறிஸ்தவம் (ரோமன் கத்தோலிக்கம்)
அரசாங்கம்மன்னராட்சி
வரலாற்று சகாப்தம்நடுப்பகுதி
824
• பம்ப்லோனா இராச்சியம் நெவார் எனப் பெயர் மாற்றம்
1004
• தெற்குப் பகுதி கைப்பற்றப்பட்டு ஸ்பெயினுடன் இணைவு
1522
• வடக்குப் பகுதி ஆரம்ப கால பிரான்சுடன் இணைவு
1589
• வடக்குப் பகுதி ஆரம்ப கால பிரான்சுடன் இணைவு
1620
முந்தையது
பின்னையது
பிராங்கியப் பேரரசு
ஆரம்ப கால பிரான்ஸ்
ஹாப்ஸ்பேர்க் ஸ்பெயின்

824 ஆம் ஆண்டளவில் நவார் இராச்சியம் உருவாக்கப்பட்டது. அப்போது உள்ளூர் பாஸ்க் தலைவர் ஈனிகோ அரிஸ்டா என்பவர் பம்ப்லோனாவின் அரசனாகத் தன்னை அறிவித்து பிராங்கியாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

இவ்விராச்சியத்தின் தெற்குப் பகுதி காஸ்டீல் இராச்சியத்துடன் 1513 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட ஸ்பானிய இராச்சியத்தின் பகுதியானது. வடக்குப் பகுதி தொடர்ந்து தனி இராச்சியமாக இருந்து வந்தது. 1589 ஆம் ஆண்டில் நவாரின் மூன்றாம் ஹென்றி பிரான்சின் நான்காம் ஹென்றியாக முடி சூடியதில் இருந்து வடக்குப் பகுதி 1620 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவார்_இராச்சியம்&oldid=1975465" இலிருந்து மீள்விக்கப்பட்டது