நீல நிலவு

ஒரு நீல நிலவு ஒரு வருடத்தின் துணை உபதேசத்தில் தோற்றமளிக்கும் ஒரு கூடுதல் முழு நிலவு ஆகும்: ஒரு

நீல நிலவு (blue moon) என்பது வழமையான மாத இடைவெளியில் வராத முழு நிலவு ஆகும். பெரும்பாலான ஆண்டுகளில் மாதமொன்றுக்கு ஒன்றாக பனிரெண்டு முழுநிலவுகள் வருவது இயல்பு. ஆனால் ஒவ்வொரு ஆண்டிலும் 12 சுழற்சிகளைத் தவிர பதினொரு நாட்கள் மீதமிருக்கும். இந்த கூடுதல் நாட்கள் ஒன்றிணைந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை (சராசரியாக 2.7154 ஆண்டுகள்)[1]) ஒரு கூடுதல் முழுநிலவு இடம்பெறும். இந்த கூடுதல் முழுநிலவு ஆங்கிலத்தில் "புளூ மூன் (நீல நிலவு)" என வழங்கப்படுகிறது.

சமய நிகழ்வுகள் முழுநிலவினை ஒட்டி கொண்டாடப்படும்போது இந்த கூடுதல் நிலவினைக் குறிக்க இந்தப் பெயர் வழங்கப்படலாயிற்று. இந்திய நாட்காட்டிகளில் இந்த வழக்கம் காணப்படவில்லை.

கிருத்துவ சமயகுருக்கள் உயிர்த்த ஞாயிறு நாளினை ஒட்டிய புனித மாதத்தை (Lent ) உதவும் முழுநிலவு மிக முன்னதாக வந்துவிட்டால் அதனை துரோகி நிலவு எனப் பொருள்பட (belewe moon)என அழைத்தனர். இதுவே மருவி புளூ மூன் என்று வழங்கப்படலாயிற்று எனவும் கூறுவர். தற்கால பயன்பாட்டில் கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என்று வழங்கப்படுகிறது.[2]

புளூ மூன் என்ற சொல் ஆங்கில இலக்கியத்தில் வெகு அருமையாக நிகழும் நிகழ்வுகளைக் குறிக்க நீலநிலவிற் கொருமுறை("once in a blue moon") என்ற மரபுச் சொல் எழுந்தது இது தமிழில் உள்ள அத்தி பூத்தார்போல என்ற சொல்லுக்கு இணையானது.

இந்நாளன்று நிலவு நீல நிறத்தில் இருக்காது. 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழும் முழுநிலவு ஓர் நீலநிலவாகும்.இம்மாதத்தில் திசம்பர் 2 அன்று ஏற்கனவே முழு நிலவு வந்துள்ளது.

நாட்காட்டி தொகு

  • 2009: டிசம்பர் 2, டிசம்பர் 31 [மேற்கத்திய நாடுகளில் UTC+05.]
  • 2010: ஜனவரி 1 , [கீழை நாடுகளில் UTC+04:30.]
  • 2010: மார்ச் 1, மார்ச் 30,[கீழை நாடுகளில் UTC+07]
  • 2012: ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 31, [மேற்கத்திய நாடுகளில் UTC+08]
  • 2015: ஜூலை 2, ஜூலை 31

இதனையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.google.com.au/search?q=(once+in+a+blue+moon)^-1
  2. Lua error in Module:Citation/CS1 at line 4417: attempt to call field 'set_message' (a nil value).

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நிலவு&oldid=3560905" இருந்து மீள்விக்கப்பட்டது