அங்கதம்
தொல்காப்பியம் அங்கதம் பற்றிக் குறிப்பிடுகிறது
தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.
"அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."[1]
சில அங்கதம் படைப்புகள் கவிழ்ப்பாக்கம் (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளன.
எடுத்துக்காட்டுக்கள்
தொகுஅகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரு விவாகரத்துக் கடிதம்
தொகு“ | கீழைத்தேசங்களுக்கு வர்த்த நோக்கமாக ஆங்கிலேயர் வந்தனர், போத்துக்கேயர் வந்தனர். போர்த்துக்கேயர் கடற்பாதையைக் கண்டுபிடித்தனர். இப்போதைய அரசு மாகவலிகங்கைக்கு மார்க்கம் தேடுகிறது. ஆனால் நீர் உமது மாஜிக்காதலியின் கண்ணீருக்குக் கால்வாய் போட்டவராகின்றீர். நளன் தமயந்தியை நள்ளிரவில் நடுக்கானகத்தே விட்டுப்போனபோது பற்றிய இலக்கிய ஆதாரம் இன்னும் என்னால் ஆராயப்படவில்லை. அதற்கிடையில் நடுப்பகலில் நடுவீட்டில் இருக்கும் படியாக அவளைவிட்டு நீர் பிரிந்து போனமைக்கான காரணங்கள் நான்கினையாவது தகுந்த வரலாற்றாதாரங்களோடு ஒப்படைக்குமாறு கேட்கிறேன். ஆங்கிலேயர் வரவால் இலங்கையில் ரோட்டுக்கள், தெருக்கள், வீதிகள், பாதைகள் எல்லாம் போடப்பட்டன, ஆனால் உமது வரவால் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பாதை மூடப்பட்டு விட்டது. | ” |
புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualism
தொகு“ | இவர்கள் ஏன் தோண்டுகின்றார்கள் என்பது பற்றி இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கறை இருக்காது.
அது பற்றிய கவலை கிஞ்சித்தேனும் இல்லாமல்...ஓலச்சுவடிகளையும் நாட்டார் பாடல்களையும் தோண்டும் போது புராதன நெருஞ்சி முள் அகப்படும். ('சங்க காலத்தில் செருப்பு'), இன்னும் தோண்ட துருப்பிடித்த இரும்பு வளையம் கிட்டும். ('புறநானூற்றில் பரத்தையர் அணிகலங்கள்'), தோண்டிக் கொண்டே போக...தோண்டிய தோண்டலில் பூமியின் மறுபக்கத்தில் தென்கிழக்காசியாவில் வெளியே வந்தும் 'சாவகத்தில் தொந்தமிழன் விழுமியங்கள்'. |
” |
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே
தொகு“ | அத்திசூடி நூலை எழுதியவர் ஔவையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே ஔவை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி முதலாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது. | ” |
- [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜெயமோகன்
- ↑ ஒரு விவாகரத்துக் கடிதம் - சிவமலர் செல்லத்துரை
- ↑ புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualism பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் - ஜோர்ஜ் இ. குர்ஷ்சோவ்
வெளி இணைப்புகள்
தொகு- அங்கதம் பரணிடப்பட்டது 2011-11-28 at the வந்தவழி இயந்திரம் - (தமிழில்)