1777
நாட்காட்டி ஆண்டு
1777 (MDCCLXXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1777 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1777 MDCCLXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1808 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2530 |
அர்மீனிய நாட்காட்டி | 1226 ԹՎ ՌՄԻԶ |
சீன நாட்காட்டி | 4473-4474 |
எபிரேய நாட்காட்டி | 5536-5537 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1832-1833 1699-1700 4878-4879 |
இரானிய நாட்காட்டி | 1155-1156 |
இசுலாமிய நாட்காட்டி | 1190 – 1191 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 6 (安永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2027 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4110 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 15 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
- ஜனவரி 16 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
- செப்டம்பர் 26 - பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
- செப்டம்பர் 27 - பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
- அக்டோபர் 4 - அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
- டிசம்பர் 24 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
பிறப்புக்கள்
தொகு- சனவரி - வில்லியம் பார்டன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1825)
- பிப்ரவரி 22 - ஜான் பென்னெட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1857)
- ஏப்ரல் 30 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)
- மே 11 - சாமுவெல் பிரிட்ஜர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- சூலை 1 - வில்லியம் ஜெப்ரீஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- ஆகத்து 14 - ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் என்பவர் ஒரு தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர். (இ. 1851)
- செப்டம்பர் 24 - இரண்டாம் சரபோஜி அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லே வம்சத்தை சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவர். (இ. 1832)
- முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825)
- பிரான்சிசு வைட் எல்லிசு 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி. (இ. 1819)
இறப்புக்கள்
தொகு- ஜூன் 1 - இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பட்டவர். (பி. 1715)