அமெரிக்கப் புரட்சி

அரசியல் எழுச்சி

அமெரிக்கப் புரட்சி(American Revolution) என்பது 1765 மற்றும் 1783 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரு அரசியல் எழுச்சியாகும். அமெரிக்க புரட்சிகரப் போரில்(1775-1783), அமெரிக்க தேசபக்தர்கள் பதின்மூன்று காலனிகளில் பிரான்சின் உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்து, பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதோடு அமெரிக்க ஐக்கிய நாடுகளை நிறுவினர். அமெரிக்காவின் காலனித்துவ வரலாறு 1765 ஆம் ஆண்டில் முத்திரைச் சட்டம் பேராயத்துடன் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வட அமெரிக்காவின் காலனித்துவ நாடுகளின் பிரதிநிதிகள் பிரித்தானிய பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்காமல் வரி செலுத்த இயலாது என்று அறிவித்தனர்.[1]

1770 இல் பாஸ்டன் படுகொலை[2] மற்றும் 1772 இல் ரோட் தீவில் காஸ்பீ எரிக்கப்பட்டது, பின்னர் 1773 ஆம் ஆண்டில் போஸ்டன் தேநீர் விருந்து [3] என ஆர்ப்பாட்டங்கள் சீராக அதிகரித்தன. போஸ்டன் துறைமுகத்தை மூடி, தொடர்ச்சியான தண்டனைச் சட்டங்களை அமல்படுத்தியதன் மூலம் பிரித்தானிய அரசு பதிலளித்தது. இது மாசசூசெட்ஸ் பே காலனியின் சுய-அரசாங்க உரிமைகளை திறம்பட ரத்து செய்தது. மற்ற காலனிகள் மாசசூசெட்ஸின் பின்னால் அணிதிரண்டன, மற்றும் அமெரிக்க தேசபக்த தலைவர்களின் ஒரு குழு 1774 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கான்டினென்டல் காங்கிரசில் தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைத்து பிரிட்டனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை ஒருங்கிணைத்தது. மற்ற காலனித்துவவாதிகள் அரசாட்சிக்கு விசுவாசத்தை தக்க வைத்துக் கொண்டனர், மேலும் அவர்கள் விசுவாசவாதிகள் அல்லது டோரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 19, 1775 இல் லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட்டில் காலனித்துவ இராணுவப் பொருட்களை அழிக்க அரசர் ஜார்ஜின் படைகள் முயன்றபோது தேசபக்த போராளிகளுக்கும் பிரித்தானிய கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையில் பதற்றம் வெடித்தது. பின்னர், இந்த மோதல் போராக உருவெடுத்தது, இதன் போது அமெரிக்க தேசபக்தர்கள் (பின்னர் அவர்களின் பிரெஞ்சு நட்புப்படைகள்) பிரிட்டிஷ் மற்றும் அவர்களின் விசுவாசிகளுக்கு எதிராகப் போராடினார்களள். பதின்மூன்று காலனி ஆதிக்கப் பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு மாகாண காங்கிரசை உருவாக்கியது. இந்த அமைப்புகள் முன்னாள் காலனித்துவ அரசாங்கங்களிடமிருந்து அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதோடு, பிரித்தானிய விசுவாசத்தை அடக்கவும் செய்தது. மேலும், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான ஒரு அமெரிக்க பெருநிலப்பகுதிக்கான இராணுவத்தை நியமித்தது. கான்டினென்டல் காங்கிரஸ் அரசர் ஜார்ஜை காலனித்துவவாதிகளின் உரிமைகளை மிதித்த ஒரு கொடுங்கோலன் என்று அறிவித்தது. மேலும் அவர்கள் காலனிகளை சுதந்திரமான மற்றும் சுயேச்சையான நாடுகளாக ஜூலை 2, 1776 அன்று அறிவித்தனர். தேசபக்த தலைமை, முடியாட்சி மற்றும் பிரபுத்துவத்தை நிராகரிப்பதற்காக தாராளமயம் மற்றும் குடியரசுவாதத்தின் அரசியல் தத்துவங்களை வெளிப்படுத்தியதோடு, குடிமக்கள் அனைவரும் சமமாகவே உருவாக்கப்படுகிறார்கள் என்றும் அறிவித்தனர்.

அமெரிக்க பெருநிலப்பகுதி இராணுவம் மார்ச் 1776 இல் பிரிட்டிஷ் இராணுவத்தை பாஸ்டனில் இருந்து வெளியேற்றியது. ஆனால், அதே ஆண்டு கோடையில் பிரிட்டிஷ் நியூயார்க் நகரத்தையும் அதன் மூலோபாய துறைமுகத்தையும் கைப்பற்றியது. இராயல் கடற்படையானது துறைமுகங்களையும் மற்ற நகரங்களையும் ஒரு குறுகிய காலத்திற்கு முற்றுகைியட்டு வைத்திருந்தனவேயல்லாமல், அவை வாஷிங்டனின் படைகளை அழிக்கத் தவறிவிட்டன. 1775-76 குளிர்காலத்தில் தேசபக்தர்கள் கனடா மீது படையெடுக்க முயன்றனர். ஆனால், அவர்கள் 1777 அக்டோபரில் சரடோகா போரில் ஒரு பிரிட்டிஷ் இராணுவத்தை கைப்பற்றினர். பின்னர் பிரான்ஸ் ஒரு பெரிய இராணுவம் மற்றும் கடற்படையுடன் அமெரிக்காவின் நட்பு நாடாக போரில் நுழைந்தது. யுத்தம் பின்னர் தென் மாநிலங்களுக்குச் சென்றது, அங்கு சார்லஸ் கார்ன்வாலிஸ் 1780 இன் ஆரம்பத்தில் தென் கரோலினாவின் சார்லஸ்டனில் ஒரு இராணுவத்தைக் கைப்பற்றினார், ஆனால் அவர் அந்தப்பிரதேசத்தில் திறம்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு விசுவாசமான பொதுமக்களிடமிருந்து போதுமான தன்னார்வலர்களைப் பட்டியலிடத் தவறிவிட்டார். இறுதியாக, ஒரு அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படை 1781 இலையுதிர்காலத்தில் யார்க்க்டவுனில் இரண்டாவது பிரிட்டிஷ் இராணுவத்தை கைப்பற்றி, போரை திறம்பட முடித்தது. பாரிஸ் உடன்படிக்கை செப்டம்பர் 3, 1783 இல் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கை முறையாக மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய தேசமானது பிரிட்டிஷ் பேரரசிலிருந்து முற்றிலும் பிரிந்ததை உறுதிப்படுத்தியது. கனடா மற்றும் இசுபெயினின் கட்டுப்பாட்டை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டனர். புளோரிடாவைக் கைப்பற்றி, மிசிசிப்பி ஆற்றின் கிழக்கிலும், பெரிய ஏரிகளுக்கு தெற்கிலும் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளையும் அமெரிக்கா கைப்பற்றியது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கப்_புரட்சி&oldid=3231740" இருந்து மீள்விக்கப்பட்டது