முதன்மை பட்டியைத் திறக்கவும்

இரண்டாம் சரபோஜி

இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.இரண்டாம் சரபோஜி அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்தார் எடுத்துக்காட்டாக ஒரு முறை தன் நாட்டில் பயணம் மேற்க்கொள்ளும் போது பெரும் மதிப்பு கொண்ட நாணயத்திற்க்கு சில்லரை யாரிடம் கிடைக்குமென விசாரித்ததில் காடுவெட்டிவிடுதி என்ற ஊரில் சு. சா. சுப்பஞ் செட்டியார் முன்னோரான முருகன் செட்டியாரிடம் இருக்குமென அறிந்து செட்டியாரின் இல்லத்தில் நேரடியாக விஜயம் செய்து நட்புக்கொண்டார் பின் செட்டியார் அரண்மனை வரும் போது பல்லாக்கில் வர வேண்டுமென பல்லாக்கையும் அதை தூக்க ஆண்களையும் நியமித்து வந்தார்.

இரண்டாம் சரபோஜி
தஞ்சை அரசர்
Raja Serfoji2-monographBYBabajiRajahBhonsleChattrapathi.png
ஆட்சி1787 (Date unknown) – 1793,
29 சூன் 1798 – 7 மார்ச்சு 1832
முடிசூட்டு விழா1787 (Date unknown), 29 சூன் 1798
முன்னிருந்தவர்துல்சாசி, அமர்சிங்
எதிர்பார்க்கப்பட்ட வாரிசுஅமர்சிங், தஞ்சையின் சிவாசி II
அரசிமுக்தாம்பாள்
முழுப்பெயர்
சரபோசி ராசா போன்சுலே சத்ரபதி
மரபுபோன்சலே
அரச குலம்தஞ்சை மராத்தியப் பரம்பரை
பிறப்புசெப்டம்பர் 24, 1777(1777-09-24)
தெரியவில்லை
இறப்பு7 மார்ச்சு 1832(1832-03-07) (அகவை 54)
தஞ்சாவூர்
அடக்கம்D Month, YYYY
தஞ்சாவூர்

ஆவணக்குறிப்புகள்தொகு

கிளாடியசு புக்கானன்(Dr.Claudius Buchanan), ஆயர் மிடில்ட்டன் (Bishop Middleton), ஆயர் இபர் (Bishop Heber), வாலன்சியா (Lord Valentia) முதலிய வெளிநாட்டவர்கள் தம் குறிப்புகளில் இவரைப் புகழ்ந்துள்ளனர்.

 • சரபோசி அழகிய தோற்றமும், வீரமும், நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். கல்வியிலும், கலையிலும் காலத்தைச் செலுத்தி வாழ்க்கையைப் புனிதமாக நடத்தினார்.
 • பிரெஞ்சு, செருமன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் தேர்ச்சியுடையவரானார்.
 • 1805-இல் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார்.
 • சாளுவநாயகப்பட்டினத்தில் மனோரதம் என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். இக்கோபுரத்தை நெப்போலியனை, ஆங்கிலேயர் வென்றதன் நினைவாகக் கட்டினார்.
 • தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்தார். பல திருப்பணிகள் செய்தார்.
 • பல அன்ன சத்திரங்கள் அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது ஒரத்தநாட்டுச் சத்திரமாகும். முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை முக்தாம்பாள்புரம் என்பர்.

அரசப்பதவிதொகு

மராத்திய அரசர் துல்சாசி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்து எடுத்த மகனான சரபோசி பட்டம் பெறவும், அம்மகனுகுக் காப்பாளராக அமரசிங்கும், சுவார்ட்சு பாதிரியார் (Rev.Schwartz) ஆசிரியராகக் கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார். அதனை ஏற்ற ஆங்கில அரசாங்கம் அமரசிங்கையே அரசராக்கியது. ஆட்சிக்கு வந்த அமரசிங்கோ, ஆட்சி செலுத்தாமல், சரபோசியையும், அரசகுடும்பத் தேவிமார்களையும் பல பொய்க் குற்றங்களுக்கு ஆளாக்கித் துன்புறுத்தினார். அவர்களைக் கொல்லவும் சதி செய்தார். இதிலிருந்து சரபோசி, அப்பாதிரியாரின் உதவியுடன் தப்பி, அப்பாதிரியாராலேயே அரசுரிமையைப் பெற்றார். 1798 இல் பட்டம் பெற்றதும், தமக்கு இருந்த அதிகாரமின்மையை அறிந்து கொண்டார். பதவியும், கௌரவமும், ஆங்கில அரசாங்கம் அளிக்கும் ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்.

ஒப்பந்தம்தொகு

 • 1798 ஆம் ஆண்டு, ஆங்கில அரசு சரபோசியுடன், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் முக்கிய உள்ளடக்கங்கள் வருமாறு:-
 1. தஞ்சை நகரமும்,அதன் அருகிலுள்ள வல்லமும் சரபோசியிடம் இருக்கும். பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்படும்.
 2. அதற்கு ஆங்கில அரசாங்கம், சரபோசிக்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் வராகனும், எஞ்சிய வருமான்த்தில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கும்
 3. அமரசிங்கு குடும்பத்தாருக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள ஓய்வுகாலச் சம்பளத்தொகையையும் ஆங்கிலேயர்களே கொடுப்பர்.
 4. இவ்வாறாக அரசியல் ஆட்சி நிலையை அவர் இழந்தாலும், தன் ஆட்சி எல்லையில், தனக்கென ஒரு காவல் படையை வைத்துக் கொள்ள, இவ்வொப்பந்தம் வழிவகுத்தது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சரபோஜி&oldid=2791412" இருந்து மீள்விக்கப்பட்டது