அமர்சிங்

தஞ்சாவூர் மராத்திய அரசர்

அமர்சிங் அல்லது ராமசாமி அமர்சிங் போன்சலே (Amar Singh or Ramaswami Amarasimha Bhonsle) (மராத்தி: रामस्वामी अमरसिंह भोसले) என்பவர் தஞ்சாவூர் மராத்திய அரசர் பிரதாபசிம்மனின் இளைய மகனாவார். இவர் தஞ்சாவூர் மராத்திய மன்னரான துளஜாஜியின் வளர்ப்பு மகனும், அவருக்கு அடுத்து சிறுவயதில் பட்டத்துக்கு வந்த இரண்டாம் சரபோஜியின் அரச பிரதிநிதியாக இருந்து 1787 முதல் 1793 வரை. ஆண்டவர் ஆவார்.

அமர்சிங்
Amar Singh
தஞ்சாவூர் மராத்திய அரசர்
அமர்சிங்
ஆட்சி1793 - 1798
முடிசூட்டு விழா1793, தஞ்சாவூர் கோட்டை, தர்பார் மண்டபம்
முன்னிருந்தவர்துளஜாஜி
பின்வந்தவர்இரண்டாம் சரபோஜி
மரபுபோன்சலே
தந்தைபிரதாபசிம்மன்
பிறப்பு1738க்குப் பிறகு
இறப்பு1802 ஏப்ரல் 19
Madhearjune
சமயம்இந்து

விவரங்கள் தொகு

தஞ்சாவூர் அரசரின் வளர்ப்பு மகனான இரண்டாம் சரபோஜி பாலகனாக இருந்த காரணத்தினால், இவர் அரச பிரதிநிதியாக இருந்து 1793 முதல் 1798 வரை அமர்சிங் ஆட்சி செய்தார்.

அமர்சிங் மிக தாராள மனம் கொண்டவராக இருந்தார். கற்றவர்களுக்கு நிறைய அளவில் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. தன் அண்ணனின் வளர்ப்பு மகனுக்கு தன்னிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் 1798 சூன் 29 அன்று ஒப்படைத்ததை தீவிரமாக எதிர்த்தார்.

தெலுங்கு மற்றும் சமஸ்கிருத நாடகங்களில் இவர் ஆர்வம் காட்டினார். மத்ருபூதன என்பவர் இவரது அவையில் புகழ்பெற்ற ஒரு கவிஞராக இருந்தார், அவர் உருவாக்கிய பாரிஜாதபவனம் இசையமைப்புக்கு குச்சுப்புடி நடணம் ஆடப்பட்டது.

மேலும் காண்க தொகு

முன்னர்
இரண்டாம் சரபோஜி
தஞ்சாவூர் மராத்திய மன்னர்
1793–1798
பின்னர்
இரண்டாம் சரபோஜி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்சிங்&oldid=3046418" இலிருந்து மீள்விக்கப்பட்டது