ஒரத்தநாடு (ஆங்கில மொழி: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, ஒரத்தநாடு வட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள கால்நடைக் கல்லூரியும் ஒன்றாகும்.

ஒரத்தநாடு
—  பேரூராட்சி  —
ஒரத்தநாடு
இருப்பிடம்: ஒரத்தநாடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E / 10.62; 79.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் ஒரத்தநாடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் சே. திருமங்கை
சட்டமன்றத் தொகுதி ஒரத்தநாடு
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். வைத்திலிங்கம் (அதிமுக)

மக்கள் தொகை 10,247 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/orathanadu

பெயர்க்காரணம்

தொகு

ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.[4][சான்று தேவை]

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

7.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் தஞ்சாவூர் 23 கிமீ, கிழக்கில் மன்னார்குடி 23 கிமீ, மேற்கில் கறம்பக்குடி 25 கிமீ, தெற்கில் பட்டுக்கோட்டை 23 கிமீ,தென்கிழக்கில் மதுக்கூர் 25 கிமீ, வடமேற்கில் அம்மாப்பேட்டை 24 கிமீ, வடகிழக்கில் வல்லம் 23 கிமீ போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.[5]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 மக்கள்தொகையும் கொண்டது. [6][7]

தொழில்

தொகு

ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.

விளையாட்டு

தொகு

துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. விழாக்காலங்களில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன.

கல்லூரிகள்

தொகு
 • அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி
 • அரசு கல்வியல் கல்லூரி
 • அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி
 • தர்மாம்பாள் கலை & அறிவியல் கல்லூரி
 • அரசு தொழில்பயிற்சி நிலையம்
 • அரசு நில அளவை பயிற்சி நிலையம்

ஆலயம்

தொகு

இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஆட்சி

தொகு

ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.

போக்குவரத்து

தொகு

ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும், பட்டுக்கோட்டைக்கும் மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் அதிக பேருந்துகள் இயங்குகிறது.இது தவிர புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்ட தலைநகருக்கும் நேரடி பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 4. உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்
 5. ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்
 6. Orathanadu - Mukthambalpuram Population Census 2011
 7. "Orathanadu - Mukthambalpuram Town Panchayat". Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரத்தநாடு&oldid=3859463" இலிருந்து மீள்விக்கப்பட்டது