தஞ்சாவூர் சிவாஜி
தஞ்சாவூர் சிவாஜி (Shivaji of Thanjavur) (மராத்தி: तंजावरचे शिवाजी) (ஆட்சிக் காலம் 17 மார்ச் 1832 – 29 அக்டோபர் 1855) சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தில் பிறந்தவர். இவரே தஞ்சாவூர் மாரத்திய அரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவினார்.
தஞ்சாவூர் சிவாஜி போன்சலே | |
---|---|
மராத்திய அரசின் கடைசி மன்னர் | |
தஞ்சாவூர் சிவாஜி போன்சலே | |
ஆட்சி | 1832–1855 |
முடிசூட்டு விழா | 17 மார்ச் 1832, அரசவை மண்டபம், தஞ்சாவூர் கோட்டை, தஞ்சாவூர் |
அரச குலம் | போன்சலே |
தந்தை | இரண்டாம் செர்போஜி |
பிறப்பு | தஞ்சாவூர் |
இறப்பு | 29 அக்டோபர் 1855 சதர் மகால், தஞ்சாவூர் கோட்டை, தஞ்சாவூர் |
சமயம் | இந்து சமயம் |
29 அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் சிவாஜி மன்னர் ஆண் வாரிசு இன்றி இறந்தார். எனவே இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் மராத்திய அரசை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.