பெப்ரவரி 22
நாள்
(பிப்ரவரி 22 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.
- 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.
- 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.
- 1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.[1][2]
- 1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.
- 1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
- 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
- 1848 – பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
- 1853 – வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசோரி, செயின்ட் லூயிசில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1862 – ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.
- 1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
- 1889 – அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.
- 1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.
- 1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.
- 1909 – கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.
- 1921 – உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.
- 1924 – கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.
- 1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
- 1961 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
- 1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
- 1972 – அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.
- 1974 – பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.
- 1974 – ரிச்சார்ட் நிக்சனைப் படுகொலை செய்யும் நோக்கில் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வாசிங்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சாமுவேல் பிக் என்பவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[3]
- 1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1986 – பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.
- 1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
- 2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
- 2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.
- 2005 – ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
- 2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.
- 2012 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
- 2014 – உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.
- 2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1302 – ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323)
- 1732 – சியார்ச் வாசிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1799)
- 1785 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1845)
- 1796 – அடால்ப் குவெட்லெட், பெல்சிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1874)
- 1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)
- 1824 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)
- 1857 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த ஆங்கிலேயர் (இ. 1941)
- 1857 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1894)
- 1879 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1947)
- 1892 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (இ. 1950)
- 1898 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி (இ. 1914)
- 1923 – சுப்பையா சர்வானந்தா, இலங்கைத் தமிழ் நீதிபதி, வழக்கறிஞர், மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (இ. 2007)
- 1932 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 2009)
- 1936 – சாலமன் பாப்பையா, தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்
- 1951 – சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்
- 1953 – ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1893)
- 1956 – அசோக் அமிர்தராஜ், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், டென்னிசு வீரர்
- 1962 – இசுடீவ் இர்வின், ஆத்தியேலிய விலங்கியலாலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் (இ. 2006)
- 1963 – விஜய் சிங், பிஜி-அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்
- 1974 – ஜேம்ஸ் பிளண்ட், ஆங்கிலேயப் பாடகர், கித்தார் இசைக்கலைஞர்
- 1975 – டுரூ பேரிமோர், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1072 – பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர்
- 1512 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454)
- 1600 – என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)
- 1913 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (பி. 1857)
- 1943 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1921)
- 1944 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)
- 1958 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (பி. 1888)
- 1987 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர், புகைப்படக் கலைஞர் (பி. 1928)
- 2001 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1925)
- 2006 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)
- 2012 – மரீ கோல்வின், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1956)
- 2012 – இரெமி ஓக்லிக்கு, பிரான்சிய ஊடகவியலாளர் (பி. 1983)
- 2019 – கருணா, ஈழத்து-கனடிய ஓவியர்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ The Samuel Byck Assassination Attempt