ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 22, 1857 - ஜனவரி 8, 1941) சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.[1][2][3]

பேடன் பவல்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் காலமானார்.

சாரணியத்தின் நிறுவுனராக

தொகு

இளைஞர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chapter 8, end of first paragraph, "Window on my Heart" by Olave Baden-Powell as told to Mary Drewery, published by the Girl Guides Assoc, 1983
  2. "Silver Buffalo Awards". Boy Scouts of America. 2014. Archived from the original on 13 January 2014. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  3. "The Library Headlines". ScoutBase UK. Archived from the original on 15 March 2005. பார்க்கப்பட்ட நாள் 2 December 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேடன்_பவல்&oldid=4101070" இலிருந்து மீள்விக்கப்பட்டது