இரெமி ஓக்லிக்கு
இரெமி ஓக்லிக்கு (Rémi Ochlik) (1983 – 22 பெப்பிரவரி 2012) ஒரு பிரான்சிய செய்தி ஒளிப்படக்கலைஞர். சிரியாவில் உள்ள ஓம்சு என்னும் நகரத்தில் நடந்த உள்நாட்டுப்போரில் சிரிய அரசின் குண்டுவீச்சு போன்ற வன்முறைச் செய்கைகளால் ஏற்பட்ட காட்சிகளைப் படமாக்கியதில் நன்கு அறியப்பட்டார்[1]
இரெமி ஓக்லிக்கு Rémi Ochlik | |
---|---|
பிறப்பு | 1983 Thionville, Moselle, Lorraine, France |
இறப்பு | ஓம்சு, சிரியா | 22 பெப்ரவரி 2012 (aged 29)
இறப்பிற்கான காரணம் | போரில் இறந்தவர் |
தேசியம் | பிரான்சு |
பணி | செய்தி ஒளிப்படக்கலைஞர் |
சொந்த ஊர் | தியோன்வில் |
விருதுகள் | Francois Chalais Award |
வாழ்க்கை
தொகுஓக்லிக்கு வடகிழக்குப் பிரான்சில் உள்ள இலொரேயின் (Lorraine) என்னும் பகுதியில் உள்ள மொசெல் வட்டத்தில் உள்ள தியோன்வில் (Thionville) என்னும் இடத்தில் 1983 இல் பிறந்தார். சிறுவனாக இருந்த பொழுது தொல்பொருளாளராக ஆசைப் பட்டார் ஏனெனில் இவர் பயணம் செய்யவும் புதுமுயற்சிகள் செய்யவும் ஆசைப்பட்டார்.[2] ஆனால் இவருக்கு இவர் தாத்தா ஓர் ஒலிப்பசு ஒளிப்படக் கருவி (Olympus OM1) ஒன்றைக் கொடுத்தவுடன் இவருக்கு ஒளிப்படம் பிடிப்பதில் ஆர்வம் பிறந்தது.[2] இவர் பாரிசில் ஒளிப்படத்துறையில் பட்டப்படிப்பு படித்தார், பின்னர் ஐக்கார்டு ஒளிப்படப் பள்ளியில் (Icart Photo School) படித்தார்.[3][4] இவர் வோசிட்டாக் (Wostok) என்னும் ஒளிப்பட விற்பனை நிறுவனத்துக்காக செப்டம்பர் 2002 முதல் ஆர்ப்பாட்டங்கள் முதலியவற்றை ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினார்.[2]
இவருக்கு புதுவிடிவு ஏற்பட்டது 2004 இல் எயிட்டியில் குடியரசுத்தலைவர் தேர்தல் போட்டியாகும்.[4] இவர் எயிட்டியைப் பற்றிக் கூறியது:
It was my war, I thought. When I saw what was going on in Haiti, I immediately asked myself what I was doing there. Guys with guns were taking me around on motorbikes. I could sense the danger, but it was where I always dreamt to be, in the action.[2]
இவருடைய ஒளிப்படங்களை சோக் (Choc) என்னும் இதழ் 2000 யூரோ கொடுத்து வாங்கியது. இவருடைய ஆர்ப்பாட்டக் காட்சி ஒளிப்படம் இளம் செய்தியாளருக்கான பிரான்சுவா சாலே பரிசு (Francois Chalais Award) பெற்றது.[2][4][5]. 2007 இல் பிரான்சு நாட்டின் தலைவர் போட்டியைப் பற்றிய படங்களை பாரிசிய ஒளிப்பட விற்பனையாளர்கள் IP3 உக்காக எடுத்தார்.[2] இவர் 2008 இல் காங்கோ மக்களாட்சிக் குடியரசிலும் 2010 இல் எயிட்டியில் நிகழ்ந்த காலரா கொள்ளைநோய்ப் பரவல் பற்றியும் செய்தி ஒளிப்படக்கலைஞராகப் பணியாற்றினார்.[3]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ "Two Western Journalists Killed in Syria Shelling". The New York Times. 22 February 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Scoop Grand Lille 2011". La Lettre. Archived from the original on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Profiles: Marie Colvin and Remi Ochlik". BBC. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
- ↑ 4.0 4.1 4.2 "Profile Page". Emphas.is. Archived from the original on 22 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Paris match. July 2005. p. 159. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.